May 19, 2015

146 769 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது ?? – நீதி கோரி யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் பேரணி (படங்கள் இணைப்பு)

தமிழின அழிப்பு நாள் யேர்மனில் உனர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வாகவும் , தமிழின அழிப்புக்கு நீதி கோரி பேரணியாகவும் நடைபெற்றது
.146 769 ஈழதமிழர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியோடு பேரணி மாகாண சபை பாராளுமன்றத்தை நோக்கி மதியம் 14:30 மணிக்கு ஆரம்பித்தது .

பேரணியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் வகையில் மாபெரும் பாதாதைகள் தாங்கிய வண்ணம் தமிழ் இளையோர் அமைப்பு துண்டுப்பிரசுரம் விநியோகித்து பல்லின மக்களுக்கு எமக்கு நடந்த இன அழிப்பை எடுத்துரைத்தனர் .
பேரணியின் நிறைவில்  மாகாண சபை பாராளுமன்றத்தின் வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவேந்தல் அரங்கத்தில்K1600_RAJ_3984 தேசியக்கொடி ஏற்றலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை அர்பணித்த மாவீரர்களுக்கும் , கொடுமையாக கொல்லப்பட்ட மக்களுக்கும் , வணக்க நிகழ்வு நடைபெற்றது . வணக்க நிகழ்வின் தொடர்ச்சியில் முள்ளிவாய்கால் படுகொலை நிறைவேறிக் கொண்டிருக்கும் தருணத்தில் இறுதி நாட்களிலும் மக்களோடு மக்களாக நின்ற ஒரு உறவின் உணர்வான பதிவுகள் இடம்பெற்றன . அதில் எமது மக்கள் சிங்கள பேரினவாத அரசால் எப்படி நயவஞ்சகமாக கொல்லப்பட்டனர் என்ற வலியை எடுத்துரைத்தார் .
நீதி வேண்டிய இப் போராட்டத்தில் யேர்மனியில் உள்ள குர்டிஸ்தான் பெண்கள் அமைப்பின் பொறுப்பளார் அவர்கள் எமது நீதியான விடுதலைப் போராட்டத்துக்கு தமது ஆதரவினை வழங்கியதோடு , ஒடுக்கப்படும் மக்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒருகிணைந்து போராடவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் .
தமிழ் மக்களின் விடுதலைக்காக நீண்ட காலமாக தனது உரிமைக் குரலை வழங்கி வரும் மதகுரு ஆல்பர்ட் கோலன் அவர்கள் தனது உரையில் ,தமிழினம் எந்த ஒரு சக்தியால் வெல்ல முடியாது என்பதை தான் இங்கு கூடி நிற்கும் மக்களின் ஊடாக காண்பதாகவும் , அத்தோடு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை வேகமாக வென்றடைய வேண்டும் என்றால் தன்னம்பிக்கை உள்ள அடுத்த தலைமுறை முன்வந்து செயற்பட வேண்டும் என்றும் தனது வேண்டுகோளை விடுத்திருந்தார் .
தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் தனது உரையில் , தமிழினத்தின் போராட்டம் என்பது மக்களின் நம்பிக்கையில் கட்டி எழுப்பப்பட்டது , அதை யாராலும் சிதைத்து விட முடியாது என்பதை உறுதியோடு தெரிவித்திருந்தார் , எமது போராட்டம் நீதியின் அடிப்படையில் சரியானது . அந்தவகையில் புலம்பெயர் மக்கள் அயராது போராடவேண்டும் என்றும் அதற்கு உறுதுணையாக நிற்கும் தமிழ் இளையோர்களையும் பாராட்டிச்சென்றார் .
தொடர்ந்து நடைபயணத்தை முன்னெடுத்திருந்த உணர்வாளர்கள் தமது தொடர்ச்சியான போராட்டத்தின் அவசியத்தை விளக்கியதோடு , ஏனைய தமிழ் அமைப்புகளின் உரைகளும் இடம்பெற்றன .
இறுதியில் எமது விடுதலையை வென்றெடுக்க நாம் தொடர்ச்சியாக போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்ட , நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் , பாடலுடன் , நிகழ்வு  நிறைவுபெற்றது .
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி
K1600_RAJ_3895K1600_RAJ_3888 K1600_RAJ_3903 K1600_RAJ_3912 K1600_RAJ_3930 K1600_RAJ_3939 K1600_RAJ_3975   K1600_RAJ_4001    K1600_RAJ_8829 K1600_RAJ_8856 K1600_RAJ_8862 K1600_RAJ_8909K1600_RAJ_4001
K1600_RAJ_8941K1600_RAJ_4026
K1600_RAJ_8969K1600_RAJ_4093
K1600_RAJ_8994
K1600_RAJ_9013
K1600_RAJ_9103
K1600_RAJ_9118 K1600_RAJ_9114 K1600_RAJ_8938 K1600_RAJ_9131K1600_RAJ_4154K1600_RAJ_4155

No comments:

Post a Comment