யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடரும் தாதியர் பற்றாக்குறையால் நோயாளர்களுக்கு உரிய சேவையை வழங்குவதில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக யாழ்.தாதிய பயிற்சிக் கல்லூரி
அதிபர் ரயூலாதேவி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயளர்களுடைய எண்ணிக்கை ஏற்ப சேவைகளை செய்வதற்கு ஆயிரம் தாதியர்கள் தேவைப்படுகின்றார்கள்.
ஆனால் இப்போது 400 தாதியர்கள் மட்டுமே சேவையில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பல சிசிச்சைப் பிரிவுகள் விரிவுபடுத்தப்பட்டு புதிதாக பல பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் நோயாளர்களுடைய தொகைக்கு ஏற்றவாறு நாமும் சேவை வழங்க வேண்டியுள்ளது.
ஆனாலும் தாதியர்கள் பற்றாக்குறையால் இங்கு பணியாற்றும் தாதியர்கள் அதிக வேலைப்பழுவை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
இதனால் அவர்கள் உடல், உள ரீதியாகவும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாதிய பற்றாக்குறை ஏற்படுவதற்கு எமது மாணவர்கள் தாதிய சேவைக்கு முன்வராமையே காரணமாகும்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதியர்களில் பெரும்பாலானவர்கள் தென்னிலங்கையினைச் சேர்ந்தவர்களே.
எனவே எமது வடபகுதி மாணவர்களும் தாதிய சேவையில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

No comments:
Post a Comment