April 27, 2015

சிறப்பாக நடைபெற்ற யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் நாடகவிழா( படங்கள் இணைப்பு)

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஏற்பாடு செய்த வருடாந்த நாடக விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஹூவர் அரங்கில், மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிறீகரன், மகப்பேற்று சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி குருபரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக சக்தி ரிவி பணிப்பாளர் கஜமுகன் கலந்து கொண்டார். நடுவர்களாக நாடகமும் அரங்கியலும் துறையை சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன் ,நாடகவியல் துறையில் நீண்டகாலமாக அறியப்பட்ட கோகிலா மகேந்திரன், நாடகத்துறையை சேர்ந்த கலாசார உத்தியோகத்தர் கிரிதரன் ஆகியோர் மதிப்பீடு செய்தனர்.
நாடகங்களாக 36ம் அணியின் "மீண்டும் மீழும்" ,35ம் அணியின் "புனலே பூதமாய்" ,37ம் அணியின் "யாரொடுநோகின்", 34ம் அணியின் உமிழ்ந்த எச்சில் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
நாடகங்கள் பொதுவான வடபகுதி தமிழ் மக்களுடைய வலிகாமம் குடிதண்ணீர் பிரச்சினை உட்பட்ட பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்வு யோசனைகளும் முன்வைக்கப்பட்டது.
1ம் நிலையை 35ம் அணியும், 34ம் அணியும் இணைந்து பெற்றுக்கொண்டனர். 3ம் நிலையை 36ம் அணியும் பெற்றுக்கொண்டனர்.
நாடக விழாவில் வைத்தியர்கள் பொதுத்துறையை சேர்தவர்கள் என பெருமளவானோர் கலந்தது கொண்டனர்.
\

No comments:

Post a Comment