April 27, 2015

ஐங்கரநேசன், சத்தியலிங்கம் ஆகியோருக்கு மருத்துவசங்கத்தால் வைக்கப்பட்ட முதல் ஆப்பு!

சுன்னாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நிலத்தடி நீரில் எண்ணெய் (கழிவோயில்) கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணற்று நீர் விவகாரம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவர்கள் சமுகத்துக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு முதலமைச்சர்
அலுவலகத்தில் இடம்பெற்றது.

முதலமைச்சருக்கும் மருத்துவர்கள் சமுகத்துக்கும் இடையிலான குறித்த சந்திப்பின் ஏற்பாட்டாளராக (தூதராக) இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் செயல்பட்டார்.

பேராசிரியர் சிற்றம்பலம் முதலமைச்சருடனான சந்திப்பு ஏற்பாடுகள் குறித்து, மருத்துவர்கள் சமுகத்தை அணுகியபோது…

‘ஏமாற்று அமைச்சர்கள் (ஐங்கரநேசன் - சத்தியலிங்கம்) இருவரும் வேண்டவே வேண்டாம். இன்னும் பிறக்கப்போகும் எத்தினையோ தலைமுறைகளின் தேசக்கருவளத்தோடு விளையாடும் இந்த வாக்குப்பொறுக்கிகளின் முகத்தைப்பார்க்கவே பிடிக்கல்ல. முதல்வர் மட்டும் தனியாக சந்தித்து பேசத்தயாரா என்று கேட்டுச்சொல்லுங்கள்?’ இவ்வாறு யாழ்.மருத்துவர்கள் சமுகத்தால் முதலாவது கோரிக்கையாக உன்னிப்பாக வலியுறுத்தப்பட்டது.

மருத்துவர்களின் கோரிக்கைக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் சம்மதித்த நிலையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் மருத்துவர்கள் சமுகம் சார்பில், ‘யாழ்.மருத்துவர்கள் சங்கமும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (யாழ்ப்பாணம் கிளை), சுகாதார வைத்திய அதிகாரிகளும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவத்துறை பீடாதிபதிகளும் கலந்துகொண்டனர்.

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவோயில் கலந்துள்ளமை தொடர்பில் தம்மால் கண்டறியப்பட்ட ஆதாரங்களின் உண்மைத்தன்மை பற்றியும், துரிதகதியில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாதபட்சத்தில் இன்னும் பல வருடங்களுக்கு நீடித்துச்செல்லப்போகும் பயங்கர பாதிப்புகள் ஆபத்துகள் பற்றியும், பணம் பலம் பொருந்திய பினாமிகளின் இழுப்புக்கு ஆடும் அமைச்சர்களின் தகிடுதத்தங்கள் குறித்தும் மருத்துவர்கள் சமுகத்தால் முதலமைச்சருக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

சந்திப்பின் பிரதான கோரிக்கையாக, சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுயாதீன அமைப்பு அதிலும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டு ஆய்வுசெய்து அறிக்கையிட்டு தீர்வைக்காண வழிவகை செய்யப்படவேண்டும் என்றும் முதலமைச்சரிடம் வலியுறுத்தினர்.
இது வேளை வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனின் மறுபக்கம் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது.

No comments:

Post a Comment