April 19, 2015

ராஜபக்ச குழுவினரின் கறுப்பு பணம் பற்றிய தகவல் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேலான கறுப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் திருட்டுத்தனமாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கறுப்பு பணம், சுவிஸ் வங்கிகள், சீசெல்ஸ், சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை இந்த நாடுகளின் வர்த்தக வங்கிகளில் நடத்தியவரும் பாதுகாப்பு பெட்டகங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அவற்றில் தங்கம் ஆபரணங்கள், இலங்கை மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக 1978 ஆம் ஆண்டு பிறகு சுவிஸ் வங்கிகளில் அதிகளவில் கறுப்பு பணம் கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல், மோசடிகள் மற்றும் தரகு பெற்றதன் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணமே இவ்வாறு வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது

No comments:

Post a Comment