April 19, 2015

மடுவில் இருந்து கிளிநொச்சிக்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகுதி மரக்குற்றிகள் மீட்பு.(படம் இணைப்பு)

மடுவில் இருந்து கிளிநொச்சிக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி முதிரை மரக்குற்றிகளை அடம்பன் பொலிஸார் இன்று(19) ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளமடு சந்தியில் வைத்து கைப்பற்றியதோடு நான்கு பேரையும் கைது செய்துள்ளதாக அடம்பன்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குனதிலக்கவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அடம்பன் பொலிஸார் பள்ளமடு பகுதிக்குச் சென்று இரண்டு டிப்பர் வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகளை கைப்பற்றினர்.
குறித்த இரண்டு டிப்பர் வாகனத்திலும் முதிரை மரக்குற்றிகள் வைக்கப்பட்டு அதற்கு மேல் கல் மண்ணினால் மூடப்பட்டு கொண்டு செல்லப்பட்ட போதே பொலிஸார் அதனை கைப்பற்றினர்.இதன் போது குறித்த இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரையும்அதன் உரிமையாளர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரனைகளை மேற்கொண்ட அடம்பன் பொலிஸார் குறித்த மரக்குற்றிகள் மடுவில் இருந்து கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 5 இலட்டசம் எனவும்; தெரிவித்தனர்.குறித்த 4 பேரும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகள் மற்றும் இரண்டு டிப்பர் வாகனமும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நிருபர்


1aunnamed (17)

No comments:

Post a Comment