April 19, 2015

இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து போராடுவோம்: அரியநேத்திரன்!

வடகிழக்கில் தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து அனைத்து உரிமைகளையும் பெற்று வாழக்கூடிய நிலை உருவாகும் வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே செல்லும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று கல்முனை ஈக்கிள் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள், விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு சோரம்போனவர்கள் என்று தமிழ்மக்கள் யாரும் எங்களை நினைக்கவேண்டாம். முன்னைய கிழக்கு மாகாண சபையில் தமிழர்கள் பலர் புறக்கணிப்புகளுக்கு உள்ளாகிய சோகமான வரலாறுகள் இருக்கின்றன.அதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாங்கள் கிழக்கு மாகாணத்தில் இரண்டு அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.ந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன், ம.இராஜேஸ்வரன், மற்றும் கல்முனை நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி கபார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment