April 14, 2015

யாழ். பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பொங்கலில் திருடர்கள் கைவரிசை!

யாழ்ப்பாணம் மட்டுவில் – பன்றித் தலைச்சி அம்மன் ஆலயப் பங்குனித் திங்கள் பொங்கல் திருவிழாவில் பக்தர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

பன்றித் தலைச்சி அம்மன் ஆலய 5 ஆவது பங்குனித் திங்கள் பொங்கல் திருவிழா நேற்று இடம்பெற்றது.
பெருந்தொகையான பக்தர்கள் நேற்றைய திருவிழாவில் திரண்டிருந்தனர். சனக்கூட்டத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
நகைகளைப் பறிகொடுத்தோர் ஆலயப் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தனர்.
முறைப்பாடுகளின் பிரகாரம் அபகரிக்கப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 10 இலட்சம் வரை இருக்கும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment