April 14, 2015

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் சத்தியாக்கிரகம்!

பல்கலைக்கழகத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை முன்வைத்து மாணவர்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவருட விடுமுறையையும் பாராது மாணவர்கள் புதுவருட தினத்திலும் சத்தியாக்கிரகம் இருந்து வருவதாக பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆட்சியாளர்கள் கல்வியை விற்கின்றமை, கல்வியை விற்பனை பொருளாக மாற்றியுள்ளமை போன்ற கொள்கைகளுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலவச கல்விக்காக முதலை கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத் தரவில்லை என மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றுடன் திறந்த பல்கலைக்கழக சத்தியாக்கிரகத்திற்கு 119 நாள் ருஹுணு பல்கலைக்கழக சத்தியாக்கிரகத்திற்கு 48 நாள் சப்ரகமுவ பல்கலைக்கழக சத்தியாக்கிரகத்திற்கு 34 நாள்
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சத்தியாக்கிரகத்திற்கு 28 நாள் களனி பல்கலைக்கழக சத்தியாக்கிரகத்திற்கு 28 நாள்

No comments:

Post a Comment