"தமிழாலயத்தின் தந்தை" நாகலிங்கம் ஆசிரியர் அவர்கள் மார்ச் 16ஆம் நாள் திங்கட்கிழமை காலமான சேதிகேட்டுத் தமிழர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார்கள்.
திரு.நாகலிங்கம் அவர்கள் சாவடைந்தமையானது தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.
யேர்மனியில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் திரு.இரா நாகலிங்கம் அவர்கள். புகலிடநாடுகளில் தமிழ்மொழி தழைத்தோங்க அயராது பாடுபட்டார்.
தமிழ் மொழியின் பாதுகாவலர், தமிழேந்தல் என்று ஐரோப்பா வாழ் தமிழ்மக்களால் மதிப்புடன் அழைக்கப்பட்ட நாகலிங்கம் ஆசிரியர் அவர்களின் தமிழ்ச்சிறார்களுக்கான கல்விப்பணி, யேர்மனியில் 1986ஆம் ஆண்டு ஆரம்பமானது.
யேர்மனியில் 10 மாணவர்களுடன் ஆரம்பித்த முதல் தமிழ்ப்பள்ளி மூன்றாண்டுகளில் 13 தமிழ்ப்பள்ளிகளாக வளர்ச்சியடைந்ததில் தமிழாலயத்தந்தை நாகலிங்கம் ஆசிரியர் அவர்களின் முழுமையான உழைப்பும் முக்கியமானது என்பதனை யேர்மனி வாழ் தமிழ்மக்கள் அனைவரும் அறிவர்.
தமிழ்ப்பள்ளிகளில் பொதுத்தேர்வு நடாத்தும் திட்டத்தை யேர்மனியில் முதன்முதலில் 1989ல் செயற்படுத்திய திரு.இரா நாகலிங்கம் அவர்கள்.
1990களில் இருந்து தமிழ் மற்றும் கலைப்பள்ளிகளை ஒன்றிணைத்து தமிழாலயப் பள்ளிகளாகவும் உருவாக்கிய பெருமை திரு.நாகலிங்கம் அவர்களுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது .
யேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே தமிழ்மொழிக்கல்வி ஊட்டக் கடுமையாக உழைத்த நாகலிங்கம் ஆசிரியர் அவர்கள், புகலிடநாடுகளில் தமிழ்தேசிய உணர்வோடு தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை வளர்த்து, அடுத்தடுத்த தலைமுறையினரையும் உருவாக்கி அரும்பணி ஆற்றியமைக்காகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தாயகத்திற்கு வரவழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்.
புகலிடநாடுகளில் வாழும் இளந்தலைமுறையினரிடம் தமிழ்மொழிப்பற்றை ஆழமாக வேரூன்றவைக்கவேண்டும் என்ற முயற்சியில் இறுதிவரை ஓயாது உழைத்து இன்று மீளாஓய்வுக்கு சென்றுவிட்ட தமிழாலயத்தந்தை திரு.இரா நாகலிங்கம் அவர்கள் தமிழ்மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார் என்பது உண்மையானது உறுதியானது.
தேமதுரத் தமிழுக்கும் தமிழீழத்திற்கும் அளப்பரிய பணியாற்றி காலம் ஆகிவிட்ட திரு. இரா நாகலிங்கம் அவர்களின் இழப்பால் ஆறாத்துயரில் மூழ்கியிருக்கும் அன்னாரின் குடும்பத்தாரின் கைகளை ஆதரவோடு பற்றிக் கொள்கிறோம்.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

No comments:
Post a Comment