March 14, 2015

யாழில் முன்னாள் போராளி தாககப்பட்டமை நடந்ததென்ன?

இரு கண்களும் முற்றாக பார்வையற்ற முன்னாள் போராளி கிருஸ்ணன் மகிந்தகுமார் என்பவர் தன்னை பிரிட்டனிற்கு அனுப்பி வைக்குமாறு விடுத்த கோரிக்கை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.படையினராலும் புலனாய்வாளர்களாலும் தானும் தனது மனைவியும் எதிர்கொள்ளும்
நெருக்கடிகள் பற்றி முதலமைச்சரிடம் புகார் செய்ய குறித்த போராளி வருகை தந்திருந்தார்.

இந்நிலையினில் அமெரிக்க மற்றும் ஜரோப்பிய பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்த முதலமைச்சர் முன்னாள் போராளியென்ற வகையினில் தனது அறையிலிருந்து வெளியேறி மற்றைய அறையினுள் சந்திக்க தயாராகியுள்ளார்.


கடுமையான மனவுளைச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அந்தப்போராளி உங்களிற்கு வாக்களித்த நாங்கள் நடுவீதியினில் நிற்பதாக தெரிவித்ததுடன் திட்டத்தொடங்கினார்.

அத்துடன் தனக்கு நீதி வேண்டியும் அதனை இலங்கையில் பெற்றுக்கொள்ள முடியாததால் ஐக்கிய நாடுகளின் ”அங்கவீனர்களுக்கான உரிமைகள்” தொடர்பான சட்டத்தின் மூலம் ஐரோப்பிய நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு ஐ.நா சபை அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றினை தருமாறும் கோரியுள்ளார்.அத்துடன் தன்னை இலண்டனிற்கு அனுப்பி வைக்க அவர் கோரியுள்ளார்.அவரது நிலையினை புரிந்த கொண்ட முதலமைச்சர் அவரது பிரச்சினைகளை கேட்டறிய தனது உதவியாளரை விடுத்துவிட்டு வெளியேறியுள்ளார்.

எனினும் அவரை வெளியே போகும்படி உதவியாளர் கூறிவிட்டு தனது பணியை தொடர்ந்தார். இந்நிலையினில் மகிந்தகுமாரை பலாத்காரமாக வெளியேற்ற காவல்துறையினர் முற்பட பதிலுக்கு பரஸ்பரம் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதனால் அங்கு நின்ற மக்கள் ஆத்திரமடைந்து அவரை விடுவித்தனர்.

No comments:

Post a Comment