மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த விடுதலைப் புலிச் சந்தேகநபர் ஒருவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் பத்து வருடங்களுக்கு ஒத்திவைசக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையும், தண்டமும் விதித்து மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இந்தத் தீர்ப்பை வழங்கினார் விடுதலைப் புலி சந்தேக நபரான செங்கலடியைச் சேர்ந்த கனகசூரியம் லோகேஸ்வரன் என்பவர் மீது மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி சந்தேகநபர் மீது (அப்பொழுது வயது 27) 2011 மார்ச் மாதம் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கைக்குண்டு எறிந்து ஜகத், குசுமசிறி எனனும் இரு இராணுவ வீரர்களைக் கொலை செய்ய எத்தனித்தாரென இரு குற்றச்சாட்டுக்களும், கைக்குண்டை வைத்திருந்தாரென மூன்றாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
எனினும் மூன்றாவது குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணையின் போது குற்றச்சாட்டுத் தொடர்பான தரவுகள், பதிவுகள் கொண்ட ஆவணங்கள் ஏறாவூர் பொலிஸாரால் நீதிமன்றத்தல் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த ஆவணங்கள் பொலிஸ் நிலையத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தைத் திருத்தி மாற்றியமைக்க நீதிமன்றம் அனுமதித்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபரான கனகசூரியம் லோகேஸ்வரன் இராணுவத்தினர் இருவரைக் கொலை செய்ய எத்தனித்தமை தொடர்பான இரு குற்றச்சாட்டுக்களுடன் - திருத்தப்பட்ட மூன்றாவது குற்றச்சாட்டான தீங்குவிளைவிக்கும் ஆயுதம் வைத்திருந்தமை (சுடு படைக்கலன்கள் சட்டத்தின் கீழ் ) தொடர்பான குற்றச்சாட்டையும் தாம் ஒப்புக்கொள்கிறார் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் சந்தேக நபர் ஆறரை வருடகாலமாக விளக்கமறியலில் இருந்து வருவதையும், முன்குற்றமில்லாமையையும் கவனத்திற் கொண்டு தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் ஏககாலத்தில் அனுபவிக்கத் தக்கதும், பத்துவருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட தலா இரு வருட கடூழியச்சிறையும் ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா 10ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டப்பணம் செலுத்தத் தவறினால் தலா ஒரு வருட கடூழிய சிறை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment