March 20, 2015

தமிழ் ஈழம் தந்த பெருந்தகை மாமனிதர் நாகலிங்கம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன் - வைகோ!

சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்பால் வதைபட்ட தமிழ் ஈழத்திலிருந்து உலகின் பல நாடுகளுக்கு சென்ற ஈழத்தமிழர்கள் தமிழ் மொழியின் மேன்மைக்காகவும், ஈழத்தமிழரின் விடுதலைக்காகவும் உன்னதமான சேவை செய்து வந்தனர். அவர்களில் ஒரு மகத்தான மனிதர்தான் நாகலிங்கம் அவர்கள். ஜெர்மனி நாட்டில் ஹேகன் நகரில் தமிழ் பள்ளிகளை நிறுவி, பின்னர் தமிழாலயப் பள்ளிகளாக உருவாக்கினார்.
 
யாழ்ப்பாணம் வலிகாமத்தில் பிறந்து, ஆசிரியர் பயிற்சி பயின்று ஈழத்திலேயே ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் ஜெர்மனியிலும் ஐரோப்பா கண்டத்திலும் தமிழ் பள்ளிகள் உருவாக பாடுபட்ட உத்தமர் ஆவார்.
 
நாடகக் கலைஞரான நாகலிங்கம் அவர்களை தமிழ் ஈழத்துக்கு வரவழைத்து தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் விருது வழங்கி பெருமைப்படுத்தினார். அப்பெருமகனார் மறைவுக்கு துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்,

20.03.2015   மறுமலர்ச்சி தி.மு.க

No comments:

Post a Comment