March 19, 2015

விஷமிகளால் விஷம் கலக்கப்பட்ட குடிநீரால் மாணவர்கள் பாதிப்பு! யாழினில் பரபரப்பு(படங்கள் இணைப்பு)!

நஞ்சூட்டப்பட்டதாக நம்பப்படும் குடிநீரை பருகிய 29 சிறார்கள் மோசமான உடல்நிலை பாதிப்புடன் யாழ்.போதனவைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஏழாலை சிறீமுருகன் பாடசாலையினிலேயே இப்பரிதாபம் நடந்துள்ளது.

மாணவர்களது குடிநீர் பயன்பாட்டிற்கென வைக்கப்பட்டிருந்த தாங்கியினில் விசம் கலக்கப்பட்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.அதனை அருந்திய மாணவர்களே உடல்நிலை பாதிப்புற்று ஒவ்வொருவராக மயங்கிவீழ்ந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் தெல்லிப்பழை வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு நேரினில் சென்று ஆய்வு செய்ததுடன் வைத்தியசாலைக்கு சென்று சிறுவர்களது நலன்களை பார்வையிட்டனர். .


No comments:

Post a Comment