March 18, 2015

காணி சுவீகரிக்கச் சென்ற நில அளவையாளர்கள் புதுக்குடியிருப்பில் சுற்றிவளைப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவ தேவைக்கென சுவீகரிக்கப்பட்ட காணியை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இராணுவத்தின் தேவைக்கென 50 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்க இன்று கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நிலஅளவையாளர்கள் குழுவொன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு சென்றுள்ளது.

இது தொடர்பாக அறிந்துகொண்ட அப்பிரதேச மக்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் சுவீகரிக்கப்படவுள்ள காணி அமைந்துள்ள முகாம் என்பவற்றினை சுற்றி வளைத்துக் கொண்டனர். பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து, உத்தியோகத்தர்கள் வெளியேறாத வகையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பிலிருந்து வருகை தந்த நில அளவையாளர்கள், தமது பணியினைக் கைவிட்டு திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment