இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னாரிலிருந்து மதவாச்சி வரையிலான ரயில் மார்க்கத்தின் ரயில் சேவையினை ஆரம்பித்து வைக்க வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடிய போதே ஆயரால் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகையினால் மன்னார் மற்றும் வவுனியா வாழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த மகஜரிற்கான சரியான பதில் இதுவரையில் வழங்கப்படாத நிலையிலேயே குறித்த மகஜர் இன்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment