வலி.வடக்கு, வலி.தெற்கு மற்றும் வலி.தென்மேற்கு போன்ற பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ள நிலையில் வலி.வடக்கு பிரதேச சபை இன்றும் தனது பிரதேச சபைக் கிணறுகளில் இருந்து மக்களுக்கு குடிதண்ணீரை விநியோகித்து வந்திருந்தமை தொடர்பினில் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனை நீதிமன்றினில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரதேச சபை தவிசாளரின் பணிப்பினிலேயே குடிநீரை தாம் விநியோகித்ததாக சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால், வடக்கு மாகாண சபையின் தூய நீருக்கான செயலணி நடத்திய கலந்துரையாடலில் குறித்த கிணறுகளில் இருந்து நீரை மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறது.
வலி.வடக்கில் மல்லாகம் சந்தை, பிரதேச சபை வளாகம், கீரிமலை கூவில், மாவிட்டபுரம் ஆகிய பிரதேசத்திலுள்ள கிணறுகளில் இருந்து பொதுமக்களுக்கான நீர் விநியோகிக்கப்பட்ட நிலையில் இந்தக் குடிதண்ணீர் மக்களுக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் அதனை நிறுத்துமாறும் சுகாதாரப் பிரிவு விடுத்த கோரிக்கையைப் புறந்தள்ளிய பிரதேச சபை தொடர்ந்தும் அந்த நீரையே இன்று மதியம் தாண்டியும் மக்களுக்கு விநியோகித்தமை கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அதனை பொருட்படுத்தாது இன்றும் மக்களிற்கு கழிவு ஓயில் கலந்த குடிநீரை விநியோகித்ததையடுத்து சுகாதாரத்துறையால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்தே வலி.வடக்கு தவிசாளரை நீதிமன்றினில் ஆஜராக பணிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment