February 21, 2015

தமிழின துரோகி சுமந்திரன் கொடும்பாவி யாழினில் தீக்கிரை!

யாழ்.நகரினில் பட்டப்பகலில் தமிழின துரோகி சுமந்திரனின் கொடும்பாவி இன்று தீக்கிரையாக்கப்பபட்டுள்ளது. தமிழராய்ச்சி மாநாட்டினில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களது நினைவு தூபி முன்னதாக தமிழ்
தேசிய கூட்டமைப்பின் இளைஞரணியினை சேர்ந்தவர்கள் வீதி வழியாக கட்டி இழுத்துவரப்பட்ட சுமந்திரனின் கொடும்பாவியை தீக்கிரையாக்கினர்.அவ்வேளையினில் கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்தினிற்கெதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள்   காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா?உலகே உனக்கு கண்ணில்லையா?போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இந்தப்போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன்,கஜதீபன்  தமிழ்த்தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன்,சர்வதேச அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ,ஜனநாயக மக்கள் முன்னணியை சேர்ந்த பாஸ்கரா மற்றும் காணாமற் போன உறவுகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீடீரென ஆர்ப்பாட்டத்தினில் பங்கெடுத்தவர்கள் வீதிகளினை வழிமறித்து ஊர்வலமொன்றை ஆரம்பித்தனர்.அவர்கள் வைத்தியசாலை வீதியினூடாக சென்று பின்னர் காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து தமிழராய்ச்சி மாநாட்டினில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களது நினைவு தூபி முன்னதாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்ட முடிவினில் உரைகள் இடம்பெற்றிருந்தது. அங்கு வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் உரையாற்றிக்கொண்டிருந்த போதே சுமந்திரனின் கொடும்பாவி தீக்கிரையாக்கப்பபட்டுள்ளது.

No comments:

Post a Comment