மகிந்தராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொலைபேசி அழைப்புகளை எதிர்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாபுறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பத்திரிகை ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
மகிந்த மீண்டும் அரசியலில் நுழைவதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் இந்த சூழ்ச்சிக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்கவில்லை என்பதுடன் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்பவில்லை.
அதன்படி எதிர்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் இதனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே மகிந்தவின் தொலைபேசி அழைப்புகளை அவர் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.


No comments:
Post a Comment