சர்வதேச
போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவினால்
களனி, சிங்காரமுல்லை பிரதேசத்தில் நடத்தப்பட்டு
வந்த போதைப்பொருள் களஞ்சியசாலை நேற்று திங்கட்கிழமை சோதனையிடப்பட்டதில், அங்கிருந்து கியர் பெட்டிகளற்ற 26 டிரெக்டர் ரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த டிரெக்டர் வண்டிகளிலுள்ள கியர் பெட்டிகளை அகற்றி, அவ்விடங்களில்; வைத்தே போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாறு கைப்பற்றப்பட்ட டிரெக்டர் வண்டிகளில் தலா 20 கிலோகிராம் போதைப்பொருட்கள் மறைக்கப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் இந்த வண்டிகளில் வைத்து மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் வெலே சுதாவுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
மில்லேட் மெசிபஃர்கயூஷன் ரக டிரெக்டர்களான இவை, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவையாகும். கியர் பெட்டிகள் இருக்க வேண்டிய இடங்களில் மறைக்கப்பட்டே பாகிஸ்தானிலிருந்து இந்த வண்டிகள் ஊடாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கலாம்.
இலக்கம் 875, பியகம � களனி வீதி, சிங்காரமுல்லை என்ற விலாசத்திலேயே மேற்படி களஞ்சியசாலை நடத்தப்பட்டு வந்ததாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரே இந்த களஞ்சியசாலையை சோதனையிட்டு வாகனங்களை கைப்பற்றினர்.
இந்த களஞ்சியசாலையானது, மாதத்துக்கு 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அடிப்படையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஜெரோம் டக்ளஸ் என்பவரால் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. இருப்பினும் அதில், இக்ரம் மற்றும் இம்ரான் என்ற பெயர்களைக் கொண்ட பாகிஸ்தானியர்கள் இருவரே சேவையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த டிரெக்டர் வண்டிகள் துறைமுகத்திலிருந்து எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அவற்றின் மூலம் எவ்வாறு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

No comments:
Post a Comment