படத்தில் நீங்கள் பார்கும் பெண்ணின் பெயர் அனுஷி ஜெயவர்தன. இவர் கொழும்பில் பிசினசில் ஓகோ என்று கொடி கட்டிப் பறப்பவர். மேலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தினேந்திர ருவான் விஜேவர்த்தனவின்
பிரத்தியேகச் செயலாளர். சமீபத்தில் மைத்திரி பால சிறிசேன , ராணுவம் தொடர்பான அதிகாரங்களை உடனடியாக தன்வசப்படுத்திக்கொண்டார். பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வசம் இருந்த இந்த அதிகாரங்களை மைத்திரி திடீர் என்று தன் வசம் எடுத்துக்கொள்ள இந்த அனுஷி தான் காரணம் என்கிறார்கள்.
அனுஷி ஜயவர்த்தன முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வாவின் நெருங்கிய உறவினராவார். கொழும்பு வியாபாரத்தில் சிறந்த இடத்தை பிடித்துள்ள அனுஷி ஜெயவர்த்தன, ருவான் விஜேவர்த்தன பதவியேற்றது தொடக்கம் ஆயுத வியாபாரிகளுடன் டீல் ஏற்படுத்தி வந்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோட்டபாய தற்போது சீனில் இல்லை. அந்த இடத்திற்கு வரும் ஒரு முயற்சியையே அனுஷி மேற்கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. அவரது வர்த்தக பங்குதாரர் மகாராஜா நிறுனத்தின் நிமல் குக் என்பவராவார். ஆயுத வியாபாரிகள் கொமிஷன் குறித்து இவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அனுஸி அறிவுறுத்தியுள்ளார். சிரச ஊடகத்தின் உரிமையாளர் கிளி மகாராஜாவின் கையாள் ஆவர் என்றும் கூறப்படுகிறது.
குறித்த இந்த டீல் நடைபெற ஆரம்பித்தவேளை , எப்படியோ இச்செய்தி மைத்திரி காதுகளுக்கு எட்டிவிட்டது. இதன் காரணமாகவே அவர் தடாலடியாக ராணுவ அதிகாரங்களை உடனடியாக தன்வசப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment