February 20, 2015

15-வது நாளாகத் தொடரும் ஜ.நா நோக்கிய விடுதலைச் சுடர்!

15 வது நாளாக கிளிச்சி பிரதேசத்தில் மூதூர் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரான்சு பட்டிணிக்கெதிரான அமைப்பின் செயற்ப்பாட்டாளர் நினைவுச்சின்னம்
முன்பாக காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை கிளிச்சிச் சங்கத்தலைவர் திரு. குமணன் அவர்கள்  ஏற்றி வைக்க விடுதலைச்சுடரினை  தமிழ்ச்சங்க செயலாளர், நிர்வாகியுமான திரு. சச்சி அவர்கள் ஏற்றிவைத்தார். கிளிச்சி மாநகரசபையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் விடுதலைச்சுடரினை தாமும் கைகளில் ஏந்தி எமக்கான ஆதரவை தருவதாக சொல்லியிருந்தனர்.
அதன் பின்னர் பிரதான வீதி வழியாக மாணகரசபை நோக்கி விடுதலைச்சுடர் சென்றிருந்தது. மாநகர முதல்வர் மற்று உதவி முதல்வர் இன்னும் பல முக்கியஸ்தர்கள் பலர் மாநகர வீதிக்கு வந்து அதனைப்பெற்றுக் கொண்டு மாநகரசபைக்கு கொண்டு சென்றனர். மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து மாநகர முதல்வர் புடைடநள உயவழசைநள ஐல்கத்துவார் அவர்கள் உரையாற்றினர். தமிழீழ மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பெரும் ஆதரவாக தொடர்ந்தும் இருப்பதாகவும், வெற்றியடைய வேண்டும் கூறியிருந்தனர். கடந்த பல ஆண்டுகளாக பல்லின மக்களுடன் தமது உறவு வளர்ந்து வருவதாகவும் அதில் தமிழ்மக்களோடு இருக்கும் உறவு பலமானது என்றும் எமது நியாயமான கோரிக்கைகள் வெற்றியடைய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். வீதியால் வரும் போதும், மாநகரசபைக்கு முன்பாகவும் துண்டுப்பிரசுரங்கம் வழங்கப்பட்டது.

12.30 மணிக்கு அவ்விடத்தில் இருந்து நிறைவு பெற்ற தமிழ்மக்கள் அதிகம் சங்கமிக்கும் லாச்சப்பல் பகுதிக்கு விடுதலைச்சுடர் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கும் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை மாலை 6.00 நடாத்தி விடுதலைச்சுடரின் தேவையையும், எதிர்பார்ப்பையும் தெரியப்படுத்தி தாரக மந்திர உச்சரிப்புடன் நிறைவு பெற்று 16 வது நாளாக நடைபெறப்போகும் இவிறிகூக்குரோன் தமிழ்ச்சங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்காக விடுதலைச் சுடர் எடுத்துச்செல்லப்பட்டது.












No comments:

Post a Comment