August 19, 2014

இராணுவத்தில் இணைந்து மரணித்த சகோதரியும் சொல்லிக்கொடுத்த உண்மையும்!

கடந்த இரு நாட்களின் முன்னர் இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த தமிழ் சகோதரி ஒருவர்
மரணமாகியிருந்தார். அவரது உடலம் அவரது மரணத்தின் பின்னர்
பரிசோதனை ஏதும் செய்யப்படாமலே தகனம் செய்யப்பட்டது.
இச் சகோதரியின் இறப்பு பற்றி பல இணையங்களும் பல கருத்துக்களை கூறி வந்தன. நாம் எம் சகோதரியின் ஒழுக்கத்தை சந்தேகப்படவில்லை.
ஆனாலும் இச் சகோதரியின் இறப்பு தற்போது இராணுவத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு ஒரு பாடத்தினை விட்டு விட்டுத்தான் சென்றுள்ளது.
இணையங்களில் இவரது மரணம் பற்றி பல விமர்சன கட்டுரைகளும் செய்திகளும் வந்த நிலையில் இராணுவ தரப்பில் இருந்து குறித்த சகோதரிக்கு ஏற்கனவே புற்றுநோய் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தான் நாம் விழித்துக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.
இது தொடர்பில் கருத்து கூறிய இராணுவம்,
படையில் தமிழ் யுவதிகளை இணைப்பதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை செய்யவில்லை என்று அடித்து கூறியது.
மருத்துவ பரிசோதனை செய்யாமல் எந்த ஒரு நாடும் படைக்கு ஆள் சேர்ப்பு இடம்பெறாது என்பது நியதி வெளிப்படையுண்மை அப்படியிருக்கையில் இலங்கை மட்டும் என்ன விதிவிலக்கு.
இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு காப்புறுதி இல்லை என்றும் கூறினர். அதற்கும் அப்பால் இவ்வாறு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை என்று அடுக்கடுக்காக கூறினர்.
இந்த உண்மை எல்லாம் இப்பெண்ணின் மரணம் தந்த உண்மைகள்.
இப்போ எங்களுக்கு உள்ள கேள்வியெல்லாம்…….
1980களுக்கு முன்னால் போராட்டம் ஆரம்பிப்பதற்கு காரணமே தரப்படுத்தல்தானே. அவ்வாறெனின் தற்போதும் சர்வதேச நாடுகளை ஏமாற்றுவதற்கு சிறிலங்கா படைகளில் தமிழர்களை இணைத்தது எல்லாம் வெறும் வெத்துவேட்டு கதைகளா? தமிழ் வாலிபர்களுக்கு ஓய்வூதியம் இல்லை காப்புறுதி இல்லை என்றால் என்னத்துக்கு அவர்களை படையில் சேர்க்கவேண்டும்?
இல்லை சிறிலங்கா இப்படித்தான் படையில் ஆட்சேர்ப்பு செய்கின்றது எனின் சிங்கள சகோதர சகோதரியினருக்கும் அப்படியா? இருக்கவே இருக்காது.
இந்த நிலை தமிழர்களை மீண்டும் தரப்படுத்தல் மற்றும் பாகுபடுத்தல் எனும் விடயத்திலேயே கொண்டுவந்து விட்டிருப்பதே உண்மை.

No comments:

Post a Comment