August 19, 2014

தமிழ்த்தாய் நாட்காட்டி - தமிழ் மக்களுக்கான அறிவிப்பு

ஆண்டு தோறும் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் , சமய விழாக்கள், நிகழ்வுகள், பொது அறிவு, தகவற் துளி போன்ற பல விடயங்களைத் தாங்கியவாறு தமிழ்த்தாய் நாட்காட்டி வெளிவந்து
கொண்டிருக்கிறது. இந் நாட்காட்டியினை மேலும் சிறப்பாகவும், மக்கள் அறிய விரும்பும் விடயங்களையும் உள்ளடக்கியவாறும் உங்களின் கைகளில் தர விரும்புகிறோம்.

எனவே கடந்த காலத்தில் வெளிவந்த நாட்காட்டியில் உள்ள தவறுகள், சேர்க்கப்பட வேண்டிய தகவல்கள் போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்த்து நிற்கின்றோம்.

எதிர்வரும் 30 ஆம் நாள் ஆகஸ்ட் சனிக்கு (30.08.2014) முன்னர் தங்களது கருத்துக்களை கீழே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி; :- thamilthai1976@gmail.com

No comments:

Post a Comment