August 18, 2014

வரலாற்றைத் திரிவுபடுத்தும் கற்பனைத் திரப்படங்களைக் காண்பிப்பது ஏற்புடையதில்லை - கஜன்!


தமிழீழ விடுதலைக்காக தமிழ்நாட்டு மக்கள்,மாணவர்கள் அமைப்புக்ளக் கட்சிகள் திரைஉலகத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு போராடிக் கொண்டிருக்கின்றீர்கள் தமிழீழம் என்ற இலட்சியத்திற்காக தீக்குழித்துள்ளீர்கள். இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு மனஉறுதியினை தரகூடிய வகையில் தாய் தமிழகம் திகழ்கின்றது.
 
பல்வேறு போராட்டங்களை இன்றுவரை நீங்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
 
இன்னிலையில் நேற்று 16.08.2014 அன்று சென்னையில் நடந்த புலிப்பார்வை என்ற திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வில் மாணவசெல்வங்கள் தாங்கப்பட்டது  மனிதநேய செயற்பாட்டாளர்களாகிய எங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
 
புலம்பெயர் தேசத்தில் இருக்கும் நாங்கள் தாய்த் தமிழகத்தை இறுக பற்றி நிக்கின்றோம். இன்னிலையில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் சாட்சியங்கள் காணொளிகளாக புகைப்படங்களாக உலகத்தின் முன்வெளிவந்துள்ளதை அனைவரும் அறிவீர்கள்.
 
தமிழீழ விடுதலை போராட்டம் ஒரு புனிதமான  போராட்டம் ஆயிரக்கணக்கான போாராளிகளும் இலட்சக்கணக்கான மக்களும் தங்கள் உயிர்களை கொடுத்துள்ளதுடன் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் போரின் வலியினை உணர்ந்து அங்கவீனர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.இன்றும் படை ஆகிகிரமிப்பிற்குள் வாழ்ந்து வருவதுடன் இன்றுவரை தாயகத்தில் சிறீலங்கா படையினரின் இனஅழிப்பு பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வருகின்றது.
 
இவ்வாறு எமது இனம் அழிந்துகொண்டிருக்கும் பொது நாங்கள் அனைவரும் விடுதலைக்காக பேராடிக்கொண்டிருக்கின்றோம்.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றை   திரிவுபடுத்தி உண்மைக்கு மாறான கற்பனைகளை திரைப்படத்தில் காண்பிப்பது எங்களால் தாங்கமுடியவில்லை தயவுசெய்து  இயக்குனர்கள் நடிகர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் இதனை உணர்ந்து ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தமிழீழ விடுதலைபேராட்டத்தில் சிறுவர்களை ஆயுதம் கொடுத்து போராட்டத்தில் இணைத்துள்ளார்கள் என்ற எதிரிகளின் குற்றச்சாட்டை,நிரூபிக்கும் வகையில் இந்த படம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது சிறுவர்களுக்கு ஆடைகளை அணிந்து ஆயுதங்களை கையில் கொடுத்து அதனை தங்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவகையில் விடுதலை போராட்ட வரலாற்றினை திரிவுபடுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் இதற்கு முன் உதாரணமாக பல திரைப்படங்களுக்கு எதிரான செயற்பாடுகள் அண்மையில் தமிழ்நாட்டில் நடந்ததை நீங்கள் உணர்வீர்கள் என்பதை தெரிவித்து நிக்கின்றோம்.
 
நன்றி
 
கஜன்
மனிதநேய செயற்பாட்டாளர்
பிரான்ஸ்.

No comments:

Post a Comment