May 11, 2014

தனிப்பட்ட பாதுகாப்பு காவலா் ஒருவரை ஏவி ஊடகவியலாளா்களை விரட்டியடித்தாா் விக்னேஸ்வரன்.!

யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்கள் மீது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் வைத்து
இனம்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளனர்.யாழ்.கோவில் வீதியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்திய வெளிவிவகார உயரதிகாரி சுஜித்ரா துரை உள்ளிட்ட அந்நாட்டு உயரதிகாரிகள் குழுவினர் சந்தித்துகலந்துரையாடினர். இந்தச்சந்திப்பு குறித்து செய்திசேகரிக்க யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கொழும்பைச்சேர்ந்த ஊடகவியலாளர்களும் அங்கு வருகைதந்திருந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அதிகாரிகள் குழுவினருக்குமான சந்திப்பு முடிவுற்றதும் முதலமைச்சரின் வாசஸ்தலத்திலிருந்து வெளியில் வந்தக்குழுவினரை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது அங்கு சிவில் உடையில் திடீரென பிரசன்னமான நபர் ஒருவர் பொலிஸார் முன்னிலையில் ஊடகவியலாளர்களை மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தியதோடு அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.இதேவேளை ஊடகவியலாளர் ஒருவரின் புகைப்படக்கருவியும் சேதத்திற்குள்ளானது. அத்தோடு ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்த குறித்த நபர் ஊடகவியலாளர்களை திடீரெனத்தள்ளியதில் நிலைகுலைந்து போன ஊடகவியலாளர்கள் அவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.இதேவேளை மேற்படிச் சம்பவமானது சாதாரணமானது(சின்னப்பிரச்சினை) என்றும் ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்து அநாகரிகமாக நடந்து கொண்டநபர் முதலமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்றும் கொழும்பிலிருந்து தற்போதுதான் வந்துள்ளார் என்றும் முதலமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் மன்மதராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.இதேவேளை மேற்படிச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் சார்பில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தமது கோரிக்கை தொடர்பினில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அடையாளப்போராட்டங்களை முன்னெடுக்க ஊடகவியலாளர்கள் தயாராகுவதாகவும் தெரியவருகின்றது


No comments:

Post a Comment