இந்த உலகத்தை பொறுத்தவரையில் சகல போராட்ட துறைகளிலும் சாதனை
படைத்தவர்கள்தான் தமிழர்கள் இந்தத்தமிழனை அன்றிருந்து இன்றுவரைக்கும் ஏமாற்ற நினைக்கும் அரசாங்கம் தொழிலாளர்களை மாத்திரல்ல ஏனைய அரச துறைகளில் உள்ளவர்களையும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மேதினக் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து உரையாற்றுகையில்,
உலகிலேயே பலவகைப்பட்ட தினங்கள் கொண்டாடப்படுகின்றது அந்தத்தினங்களில் தொழிலாளர் தினமும் ஒன்றாகும். இத்தினமானது தொழிலாளர் வர்க்கத்தை பொறுத்தவரையில் சர்வதேச மட்டத்திலே மிகவும் முக்கியமானதொன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் தினம் சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தபோதும் இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் தொழிலாளர்களுக்கான முக்கியத்துவம் இல்லையென்றே கூறலாம். இன்று இந்த நாட்டிலே மிகவும் துன்பப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் யாரென்றால் அது தொழிலாளர்களே என்றுதான் கூறமுடியும்.
குறிப்பாக வடகிழக்கு மாகாணம், மலையகப்பகுதிகளிலும்கூட திட்டமிட்ட அடக்கு முறைக்குள்தான் இவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்திக்கொண்டு வாழ்கின்றார்கள் இவ்வாறான நிலமை இந்த நாட்டிலே நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
தொழிலாளர்களை நினைவுகூர்ந்து இத்தினத்தினை கொண்டாட இருந்த வேளையில் கூட பல சதிவேலைகள் இடம்பெற்றிருப்பதாகவும் அறியமுடிகின்றது இவ்வாறான சதிவேலைகளை செய்பவர்கள் யார் இவர்கள் இதனை எதற்காகச் செய்கின்றார்கள் என்பதனை நாங்கள் ஒவ்வொருவரும் உணரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இந்த நாட்டிலே எந்த உரிமையும் அற்ற சுதந்திரமற்ற இனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இந்த அரசாங்கம் எமக்கு எந்த சுதந்திரமான தீர்வையும் தருவதாக இல்லை இதற்காகவேண்டி எமக்கு நிலையான சமாதானமட வரும் வரைக்கும் எமது போராட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் செல்லவேண்டும்.
இந்த நாட்டிலே ஜனநாயகம் என்று கூறி அராஜகத்தினை செய்து கொண்டிருக்கின்றார்கள் மதபோதகர்கள் மக்களை நல்வழிப்படுத்த வேண்டியவர்கள் அவர்கள் செய்கின்ற வேலை என்ன தெரியுமா? ஒரு இனத்தின் நிலங்களை அபகரிப்பதும் அவர்களினது ஆலயங்களை அழிப்பதுமாகத்தான் இருந்து வருகின்றது.
இந்த உலகத்தை பொறுத்தவரையில் சகல போராட்ட துறைகளிலும் சாதனை படைத்தவர்கள்தான் தமிழர்கள் இந்தத்தமிழனை அன்றிருந்து இன்றுவரைக்கும் ஏமாற்ற நினைக்கும் அரசாங்கம் தொழிலாளர்களை மாத்திரல்ல ஏனைய அரச துறைகளில் உள்ளவர்களையும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றது.
அவர்கள் செய்த கொடுமைகளுக்கும் ஆக்கினைகளுக்கும் இன்று சர்வதேசம் இந்த அரசாங்கத்தினை பார்த்து பலகேள்விக்கனைகளை தொடுத்து நிற்கின்றது இதற்கான முன்னெடுப்புக்களுக்கு காரணகர்த்தாவாக இருக்கவேண்டியவர்கள் உங்களைப்போன்ற தமிழ்உணர்வுள்ள பற்றாளர்களும் எமது தமிழத்தலைமைகளும் என்பதனை நாம் என்றும் மறந்து விட முடியாது. இவ்வாறு செயற்பட்டால் மாத்திரம்தான் எமது விடுதலையை வென்றெடுக்கமுடியும்.
இந்த நாட்டிலே என்றோ ஜநனாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது சிறைக்கூடங்கள் கட்டப்படுவது சட்டத்தினை மதிக்காதவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காகவும் அவர்களை சமுதாயத்திற்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்கும் சிறைக்கூடங்கள் அமைக்கப்படுகின்றது ஆனால் இந்த நாட்டிலே சிறையிலே அடைக்கப்பட்வர்களுக்குக்கூட தங்களது உயிர்களை பாதுகாக்கமுடியாத அளவிற்கு கடந்தகால செயற்பாடுகள் அமைந்திருந்தது.
இந்த நாட்டிலே திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது எங்களுடைய தமிழ்த்தலைமைகள் நீதிமன்றம் சென்று தீர்வு கேட்டு போராடினார்கள் அன்று நியாயங்கள் சரியாக வழங்கப்படவேண்டிய சூழலில் அந்தநேரத்தில் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த சியானி பண்டாரநாயக்கா கூட அந்த உயர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார் இவ்வாறு நியாயங்கள் மறுதலிக்கப்பட்ட ஒரு நாடாக இந்த நாடு இருக்கின்;றது.
இவர்களது நடவடிக்கைகள் யாவும் இனரீதியாகவும் மதரீதியாகவும்தான் சென்று கொண்டிருக்கின்றது இந்த நாட்டிலே உரிமைக்காக போராடியவர்கள் நாங்கள் உயிர் நீத்தவர்கள் நாங்கள் அத்தோடு வடகிழக்கு இணைப்பென்று கேட்டவர்களும் நாங்கள்தான் ஆனால் எங்கள் கருத்துக்களை மறுதழித்து வடக்கையும் கிழக்கையும் இரண்டாகப்பிரித்து தன்னிறைவு கானுகின்ற ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கத்தினை பார்க்கவேண்டியிருக்கின்றது.'
கிழக்கு மாகாணசபையை பொறுத்தவரையில் எங்கள் கட்சிசார்பாக பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம் இங்கு பல கொடுமைகள் எங்கள் இனத்திற்கு எதிராக தொடர்ந்து நடந்துகொண்டுதான் வருகின்றது அங்குள்ள அமைச்சர்களது தீர்மானங்களும். ஆளுனரின் தீர்மானங்களும்தான் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றதே தவிர பாதிக்கப்பட்ட ஓரு இனத்தின் உரத்தகுரல் அவர்களுடைய செவிகளுக்கு கேட்பதில்லை.
எனவே இனிவரும் காலங்களிலாவது எமது இனத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டு எமது இலக்கினை அடைவதற்கு தொடர்ந்து போராட முன்வருவது காலத்தின் கட்டாயமாகும் எனவும் கூறினர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், பிரசன்னா, கோ.கருணாகரம், நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), துரைராஜசிங்கம், அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், ஆகியோரும் மாவட்டத்தின் இளைஞர் அணித்தலைவர்கள், செயலாளர்கள் வர்த்தக பிரமுகர்கள் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment