May 25, 2014

யேர்மனியில் ஈழத்தமிழர்களை இந் நாட்டு அரசியல் சக்திகளாக மாற்றுவோம்

யேர்மனி NRW மாநிலத்தில் நாளை  மே.25ம் திகதி (25.05.2014) ஐரோப்பிய
பாராளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் இடதுசாரி கட்சி சார்பில் Sankt Augustin  நகரசபைக்கு செல்வன் கோகுலன் பாலகிரிஸ்ணன் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
செல்வன் கோகுலன் பாலகிரிஷ்ணன் அவர்கள் கடந்த ஆண்டுகளாக எமது தாயக உறவுகளுக்கு தான் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சியின் ஊடாக பல்வேறு நிகழ்வுகளில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை எடுத்துரைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது . 




இதே போன்று உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் யேர்மனி பசுமைக்கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் அவர்கள் போட்டியிடுகின்றார். இவர் யேர்மனி NRW மாநிலத்தில் இம்மாதம் மே.25ம் திகதி (25.05.2014) ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பசுமைக்கட்சி சார்பில் (Bündis 90/ Die Grünen) கெம்பன் (Kempen) நகரசபைக்கு ஆறாவது இடத்திலும் கிறைஸ் வியர்சன் (க்ரீஎஸ் விஎர்சென்) வட்டார சபைக்கு நான்காவது இடத்திலும் போட்டியிடுகின்றார்.
இவரது தீவிர முயற்சியினால் யேர்மன் பசுமைக்கட்சியின் மத்திய மாநாட்டில் 2009ம் ஆண்டில் பேர்லினிலும் 2014ம் ஆண்டில் (Dreseden) டிறசன் நகரிலும் பசுமைக்கட்சி ஈழத்தமிழருக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.




இதேபோன்று செல்வன் அஸ்வின் பார்குணந்தரன் அவர்கள் தேர்தல்தொகுதி 100 ((Leienbach) Oberbergischer Kreis / Gummersbach பிரதேசத்திலும் போட்டியிடுகின்றார் .

தமிழ்மக்கள் கட்சிபேதமின்றி தமது வாக்குகளை இவர்களின் கட்சிகளுக்கு வழங்குவதன் மூலம் தமது வாக்குகளை இவர்களுக்கு  அளித்து ஈழத்தமிழர்களாகிய இவர்களை  வெற்றிபெற வைப்பதன் ஊடாக யேர்மனியில் ஈழத்தமிழர்களை இந் நாட்டு  அரசியல் சக்திகளாக மாற்றுவோம்.



ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி 

No comments:

Post a Comment