May 29, 2014

மலேசியாவில் தேடுதல் வேட்டை தொடரும் ஈழத்தமிழ் அகதிகள் கைதுசெய்யப்படலாம்!

மலேசியா காவல்துறையினரால் தொடர்தேடுதல் வேட்டை நடத்தப்படவுள்ளதாகவும் அங்குள்ள ஈழத்தமிழர் அனைவரும் விசாரணைக்கு
உட்படுத்தப்படவுள்ளதாக மலேசிய காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பிலான நடமாட்டத்தினை ஆராய்வதற்காக மலேசிய காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மலேசியாவில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் அனைவரையும் விசாரணைசெய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மலேசியா காவல்துறை மா அதிபர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார் மலேசியாவில் 4000 த்திற்கும் அதிகமான தமிழ் அகதிகள் வாழ்ந்துவருகின்றார்கள் இவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் விசாரணையின் அடிப்படையில் கைதுசெய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment