May 11, 2014

உலக இளைஞர் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தடை!

இலங்கையில் நடைபெற்று வரும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், மாநாட்டின் ஏற்பாடு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் முறையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அத்துடன் சிறந்த உணவு விநியோகம் இன்மை, தங்குமிட வசதிகள் முறையாக ஏற்படுத்தாமை போன்ற குற்றச்சாட்டுகளையும் வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment