ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் விவாதிக்கப்பட இருந்த நிலையில் ஜெயக்குமாரியின் கைதுடன் கோபி நாடகம் மேடையேற்றப்பட்டது. ஜெயக்குமாரி வீட்டிலிருந்து
கோபி தப்பி ஓடினார் எனக்கூறப்பட்டது. சுற்றிவர அவ்வளவு படையினர் நிற்கும் போது தனி ஒரு நபர் எவ்வாறு தப்பி ஓட முடியும். வீட்டிற்கு வெளியே பெரும் வெட்டைவெளியான இடம் இருந்த போது அவரைச் சுட்டிருக்க முடியாதா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்த போது படையினரால் சரியான பதிலைக் கூறமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தானே அவ்வாறான கேள்வியைக் கேட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து இந்த நாடகத்தை மேடையேற்றுவதற்காக ஆண்கள் பெண்கள் உட்பட 50க்கு மேற்பட்டவர்கள் வரை கைது செய்யப்பட்டனர். இதன் உண்மை நிலையை ஆய்வு செய்ய சென்ற ருக்கி பெர்ணாண்டோவும் அருட்தந்தை பிரவீன் மகேசனும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் கைதுடன் உண்மை நிலை பற்றிய சுயாதீனமான ஆய்வும் இல்லாமல் போய்விட்டது. தொடர்ந்து உண்மை நிலை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஒருவருக்கும் துணிவு வரவில்லை. படையினர் தருகின்ற அறிக்கைகள் மட்டும் தகவல்களாக வெளிவந்தன.
ஊடகவியலாளர்கள் சென்று பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் எதுவும் வழங்கப்படவில்லை. இறுதியாக நெடுங்கேணிப் பிரதேசத்தில் கோபி உட்பட மூவர் சுடப்பட்டதாக அரசாங்கம் அறிக்கை விடப்பட்டுள்ளது. சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்காது தானே அனுராதபுரத்தில் அடக்கம் செய்ததாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. இங்கும் கூட உண்மையாக துப்பாக்கிச்சூடு நடந்ததா? உடல்கள் அடக்கம் செய்யப்பட்டனவா? என்பதற்கு சுயாதீனமாக சாட்சிகள் இல்லை.
பெண்கள், சிறுமிகள் உட்பட 50க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கூட ஊடகச்செய்திகள் வந்தன. துரதிஸ்ட வசமாக இதிலுள்ள உரிமை விவகாரம் தொடர்பாகக் கூட குரல்கள் இலங்கையிலோ சர்வதேச மட்டத்திலோ பெரியளவிற்கு கேட்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பான்மையானோர் புனர்வாழ்வு பெற்றவர்கள் என்பது தான் இங்கு மிகப்பெரிய சோகம்.
இந்த நாடக மேடையேற்றலை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத் திடமிருந்தே இலங்கை கற்றிருக்கலாம். ஈராக்கிலும், லிபியாவிலும் பொய்யான மேடையேற்றல் ஒன்றினை மேற்கொண்டு தான் அழிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. அதே போன்று இலங்கையிலும் மேடையேற்ற அரசாங்கம் முயல்கின்றது.
இந்த மேடையேற்றலும் அதனைத் தொடர்ந்த படையினரின் கெடுபிடிகளும் தமிழ் சிவில் வெளியினை வெகுவாக சுருங்கச் செய்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ் மக்களிடமிருந்து போராட்டங்கள் எழும்பியிருக்க வேண்டும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பெரிய அக்கறை காட்டாததினால் போராட்டங்கள் எழவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியாவில் ஜெயக்குமாரி கைது தொடர்பாக போராட்டம் நடாத்தியமையினால் கூட்டமைப்பினர் மன்னாரில் ஒரு போராட்டத்தை நடாத்தினார். அதன் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம் எதுவும் நடத்தாததினால் கூட்டமைப்பினரும் நடாத்தவில்லை.
அரசாங்கம் கோபி நாடகத்தை மேடையேற்றியமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் முதலாவது ஜெனிவாவிலிருந்து வரும் அழுத்தத்தினைக் குறைப்பதாகும். புலிகள் மீண்டும் ஒருங்கிணைகின்றனர். இதனால் நாம் பயங்கரவாதிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்கும் போது மனித உரிமை மீறல்கள் சில நடைபெறுவது தவிர்க்க முடியாதது என்ற தோற்றத்தை அரசாங்கம் கொடுக்கப்பார்க்கின்றது. எப்படியாவது மனிதஉரிமைகள் பேரவை ஆணையாளரின் விசாரணைப்பொறிமுறையை தவிர்க்கவே இலங்கை விரும்புகின்றது. அதே நேரம் நம்பத்தகுந்த உள்ளக விசாரணை ஒன்றை நடாத்தவும் அது தயாராக இல்லை. ஆணையாளரின் விசாரணையை தவிர்க்கவும் வேண்டும். தானும் விசாரணை செய்ய முடியாது. நல்லிணக்கம் தொடர்பான அழுத்தத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் முகம் கொடுப்பதற்கு இதற்கு கிடைத்த தெரிவு மீண்டும் புலிக்கதையை அரங்கேற்றுவது தான்.
இரண்டாவது டயஸ் போறாவின் செயற்பாட்டை கட்டுக்குள் வைத்திருத்தலாகும். டயஸ்போறாவின் செயற்பாடு அரசாங்கத்தி;ற்கு பலவித நெருக்கடிகளைக் கொடுக்கிறது. பாரிய வலையமைப்பு அதற்கு இருப்பதனால் அது ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான பொதுக்கருத்தை சர்வதேச மட்டத்தில் உருவாக்குகின்றது. அடுத்தது மேற்குலகம் டயஸ் போறாவினை பயன்படுத்தித் தான் அரசாங்கத்தின் மீது செல்வாக்கினை பிரயோகிக்கின்றது. கூட்டமைப்பு இந்தியாவின் செல்வாக்கிற்கு கீழ் இருக்கின்றதே ஒழிய மேற்குலகத்தின் செல்வாக்கின் கீழ் இருக்கின்றது எனக் கூற முடியாது. இந்தியா கூட்டமைப்பைப் பயன்படுத்துவது போல மேற்குலகம் டயஸ் போறா அமைப்புக்களை பயன்படுத்துகின்றது.
இந்தப் பயன்படுத்துகை இந்தியாவிற்கும் சில நெருக்கடிகளைக் கொடுக்கின்றது. இந்தியா சர்வதேசமட்ட விசாரணையை ஒருபோதும் விரும்பவில்லை. தானும் மாட்டுப்பட வேண்டிவரும் என்பது ஒரு காரணம். இதை விட தன்னை மீறி மேற்குலகம் இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதையும் இந்தியா விரும்புவதில்லை. அத்துடன் டயஸ் போறாவின் இருப்பு தனது எடுபிடியான கூட்டமைப்பினை பலவீனப்படுத்தி விடும் என்ற அச்சமும் அதற்கு உண்டு.
டயஸ் போறாவினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால் அதன் மீது தடைகளை விதிக்க வேண்டும். உள்நாட்டில் புலிக்கதையைக் கட்டியெழுப்பாமல் டயஸ் போறாத்தடைக்கு நியாயத்தை தேட முடியாது.
மூன்றாவது தாயகத்தில் மீண்டும் இராணுவ நிர்வாகத்தை பலப்படுத்துவதாகும். அரசாங்கம் அரசியல் தீர்விற்கு தயாரில்லாத நிலையில் தமிழ் மக்களை நம்பத்தயாரில்லை. தமிழ்த் தேசியம் ஆழ வேரூன்றி உள்ளமையினால் அபிவிருத்தி மாயைகள் எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் பெரியளவிற்கு எடுபடவில்லை. இந்நிலையில் இராணுவ இறுக்கத்தை குறைக்க அரசாங்கம் அஞ்சுகின்றது. ஜனநாயக சூழல் அதிகரிக்க அதிகரிக்க தமிழர் தாயகத்தின் மீதான அரசாங்கத்தின் பிடியும் கொஞ்சம் கொஞ்சமாக தளரத் தொடங்கும்.
சிங்கள நண்பன் ஒருவன் கூறினான். “பந்தினை தண்ணீருக்குள் அமிழ்த்தி வைத்திருப்பது போல தமிழ் மக்களை அரசாங்கம் இராணுவ நிர்வாகத்தின் கீழ் அமிழ்த்தி வைத்திருக்கின்றது. எப்போது கையை எடுக்கின்றதோ அன்றிலிருந்து தமிழ் மக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கமாட்டார்கள்.
நன்றி
நம்தேசம்

No comments:
Post a Comment