ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முறையாக செயற்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களை யுத்த களத்தில் பாதுகாத்திருக்க முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரித்திருந்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பான் கீ மூன் சர்வதேச உறவுகள் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ‘நிலைபேறான சமாதானம்-நிலைபேறுள்ள அபிவிருத்தி இலக்குகளை எட்டுதல்’ எனும் தலைப்pல் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ இலங்கை எமக்கு பல பாடங்களை புகட்டியுள்ளது. மிகவும் கடினமான பாடங்கள் பலவற்றை நாம் இலங்கையிலிருந்து படித்திருக்கிறோம். நீங்கள் உங்களது மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளீர்கள். கடந்த பல தசாப்தங்களாக பிரச்சினை நீடித்துவந்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளில் ஐ.நாவின் பணியாளர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தால் இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
ஐ.நாவின் இலங்கைக்கான அதிகாரிகளின் செயற்பாடுகள், அவர்களினால் விடப்பட்ட தவறுகள் மற்றும் அவர்களின் பணிக்கு இடையூறாகக் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்று விசேட குழு ஒன்றினை அமைத்துள்ளேன். மனித உரிமை பாதுகாப்பின் அடிப்படையில் இக்குழு அமையப் பெற்றுள்ளது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment