நூல் அறிமுக நிகழ்வு 27/08/2016 அன்று Auckland ,New Zealand ல் இடம் பெற்றது. சிரேஷ்டஊடகவியலாளர் S.M வரதராஜன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நியூ சீலாந்தில் உள்ள பல அமைப்புக்களையும்சேர்ந்த பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இதில் விரிவுரையாளர் சண் வேலுப்பிள்ளை பேசுகையில், பாலன் தோழரின் நூல் ஈழத் தமிழர் தொடர்பாக தமிழக அரசியல் வாதிகளின் யதார்த்த நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது எனக் குறிப்பிடடார்.
Auckland பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கலாநிதி அனா பொன்னம்பலம் உரையாற்றுகையில் ஈழத்தமிழ் பெண்களின் அவல நிலை ஏனைய நாடுகளை விட தமிழகத்தில் இவ்வளவு மோசமாக இருப்பது பாலனின் நூல் மூலமே எமக்குத் தெரிய வந்துள்ளது, இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.
ப. தாயகரன் பேசுகையில் , பலராலும் பல இடங்களிலும் கோரிக்கைகள் விடப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பாலனின் நூலில் இருந்து தெரியவந்துள்ளது. நியூ சீலாந்தில் புலம்பெயர் தமிழர்கள் யதார்த்த பூர்வமான தீர்வு கிடைக்கும் வகையில் ஒன்றுபட்டு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பேராசிரியர் V. நித்தியானந்தன் பேசுகையில் எமக்கு தெரிந்தும் தெரியாமலும் இருந்த பல தமிழகஅரசியல் நிலவரங்களை மட்டுமல்ல , எம்மவர்களும் இந்த ஈழ அகதிகள் தொடர்பாகவும் அங்குள்ள சிறப்பு முகாம் என்று சொல்லப்படுகின்ற சிறைச்சாலைகள் தொடர்பாகவும் பாலச்சந்திரன் பல உண்மைகளைத் தனது அனுபவத்தில் அடிப்படையில் தெளிவாகவே தெரியப்படுத்தியுள்ளார். ஒருநூலுக்கு சில அம்சங்கள் இருக்க வேண்டும் இந்த நூலில் அந்த அம்சங்கள் இல்லை.
ஆனால் இதுஒரு நூல் அல்லாத ஒரு நூல். இதுவே இந்த நூலின் ஒரு சிறப்பான அம்சமாகும். இந்த விடயத்தில் பாலச்சந்திரன் முக்கியத்துவம் பெறுவதுடன், சிறந்த ஆவணம் ஒன்றை பாலன் எமக்குத் தந்துள்ளார். அவர் குறிப்பிடட சில விடயங்களில் நான் அவதானித்த ஒன்று , கடல் கடந்தஅரசாங்கத்தின் பிரதமர் என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் உருத்திரகுமாரன் , ஊழல் செய்தஜெயலலிதாவை விடுதலை செய்யும்படி கேட்ட அதே வேளை நீண்ட காலமாக விசாரணை இன்றி சிறையில் வாடும் இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்யும்படி ஒரு போதும் கோரியதில்லை.கடல் கடந்த அரசுக்கு இந்த மக்கள் படும் அவலம் தெரியவில்லையாயின் அதையிட்டு நாம்ஆச்சரியப்படவும் கவலைப்படுவதையும் தவிர வேறு வழியில்லை.
இன்னும் முக்கிய விடயம் திரு கருணாநிதியும் செல்வி ஜெயலலிதாவும் மாறி மாறி பதவிக்கு வந்தபோதும் ஒருவருடைய திட்டத்தை மற்றவர் மாற்றினாலும் இந்த விடயத்தில் மட்டும் இருவரும் ஒற்றுமையாக இருப்பதை பாலன் சுட்டிக்காட்டியுளார்.
இது போன்று நம்மவர்கள் படிக்க வேண்டிய பல அரசியல் திருகு தாளங்களை பாலன் இந்த நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
மூத்த ஒளிபரப்பாளர் திரு வரதராஜன் இந்த புத்தகத்தை ஒரு அனுபவத்தை பதிவு செய்கின்ற புத்தகம் மட்டுமல்ல ஒன்றுபட்ட தமிழ் மக்களின் செயற்பாட்டுக்கான ஒரு பதிவாகும். இதுஎல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் , பலனுடனான தனது சிறு வயதுகால அனுபவத்தை பகிந்து கொண்ட அவர் , பாலனின் சிறந்த ஆளுமைகள் பற்றி குறிப்பிட்டதுடன் , வட மாகாணசபைக்கான முதலமைச்சரின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் v. நித்தியானந்தன்வட மாகாண சபை மூலமாக இதற்கு ஒரு நியாய பூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவேண்டும்.
அதேவேளை பாலன் தனது நூலில் குறிப்பிடடது போல இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு சிறப்பு அதிதியாக வருகை தந்திருக்கும் தமிழ் நாடு வழக்கறிஞர் திரு பிரேம் அவர்களுடன் இங்குள்ளவர்கள் கலந்துரையாடி ஒரு ஏற்பாட்டினை மேற் கொள்வதன் மூலம் ஒரு சிறந்தநடவடிக்கை எடுக்கலாம் என்றும் குறிப்பிடடார் .
Canada ல் Campaign to Close Special Camps in Tamil Nadu என்ற அமைப்பின் செயற்படடார்களின் ஒருவரான செந்தமிழினி பிரபாகரன், இந்திய தமிழக அரசுகளின் ஈழத்து தமிழ் மக்களுக்கு எதிரானஇந்த கொடிய அநீதி தொடராமலிருக்க தொடர் போராட்டங்களை வலிமையாக முன்நகர்த்தும் கடன் உலக தமிழ் மக்களுக்கு உண்டு. அந்த வகையில் நியூசிலாந்து வாழ் தமிழ் மக்களின் இந்தமுன்னுதாரண முயற்சிக்கு இந்த நிகழ்வுக்கு முன்னின்று உழைத்த அனைத்து உறவுகளுக்கும்பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் ஒரு சிலரை விடுதலை செய்வதும் பலரை அடைப்பதும் என மனித வதைகள் தொடரும் சிறப்பு முகாம்களை தமிழகத்தில் இல்லாதொழிக்க அனைத்துலக தமிழ் மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரும் கை கொடுக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
மற்றும் ஈழ அகதிகள் தொடர்பாக செயட்பட்டு வரும் தமிழ் நாடு வழக்கறிஞர் திரு புகழேந்தியின் செய்மதியூடான உரையும் இடம்பெற்றது.நிகழ்வின் இறுதியில் தமிழ் நாடு வழக்கறிஞர் திரு பிரேமுடன் கலந்துரையாடல் ஒன்றும்இடம் பெற்றது. இது தொடர்பான தொடர்ச்சியான செயற்பாடுகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதுடன் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் இலவசமாக நூல்களும் வழங்கப்பட்டது எனபதும் குறிப்பிடத்தக்கது.
பாலன் தோழர் எழுதிய சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் என்ற நூலையும் அதன்ஆங்கில மொழிபெயர்ப்பு நூலையும் பின்வரும் இணைப்புகளில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment