வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்களே பாதயாத்திரையில் தேவையற்ற விளையாட்டுகளை மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பாதயாத்திரையின் இறுதி நாளில் வெளி பிரதேசங்களில் இருந்து வந்து, இணைந்து கொண்ட சில நபர்கள் தேவைக்கும் அதிகமாக விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது முதல் இறுதி நாள் வரையில் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது. இம்முறை நாம் ஒழுங்கு செய்திருந்த பாதயாத்திரை இவ்வளவு வெற்றியளிக்கும் என பொலிஸார் கூட எதிர்பார்க்கவில்லை.
பாதயாத்திரையை ஏற்பாடு செய்திருந்த கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
நேர்மையான எண்ணத்துடன் இவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்றார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு பாதயாத்திரையில் இணைந்து கொண்டனர்.
இறுதி நாளில் இணைந்து கொண்ட சில தரப்பினர் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்களாகவே இருக்க வேண்டும்.
அவ்வாறு செய்தார்கள் என்பதற்காக எமது பாதயாத்திரை தோல்வியடைந்ததாக அர்த்தப்படாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment