August 12, 2016

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறிய தயா மாஸ்டர் மீண்டும் சிறையில்!

வவுனியா மேல் நீதிமன்றத்தில் பிணையாளர்கள் ஆஜராகாத காரணத்தால் தயா மாஸ்டர் மீண்டும் நேற்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மக்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்த உதவிசெய்ததாக குற்றஞ்சாட்டி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்றுமுன்தினம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜராகிய தயா மாஸ்டரை ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் நான்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் தலா ஒரு இலட்சம் சரீரப் பிணையுடனும் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் உத்தரவிட்டார்.

 
பிணையாளிகளை நேற்றும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத காரணத்தினால் பிணையாளிகள் நீதிமன்றத்திற்கு வரும் வரை தயா மாஸ்டர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீண்டும் தடுத்து வைக்கப்பட்டார்.


No comments:

Post a Comment