August 13, 2016

உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக உதவிகள் !

சுவிற்சர்லாந்தில் வசிக்கும் திரு.திருமதி நித்தியானந்தம் பத்மாவதி தம்பதியினர் மகள் விதுசா அவர்கள் 12.08.2016 இன்று தனது 18வது பிறந்த நாளை தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் மாணவர்களுக்கு உதவியதன் மூலம் கொண்டாடியுள்ளார்.




குறித்த பயனாளிகளின் ஒருவர் ஆன செல்வன் டிசான் அவர்களின் தந்தை தடுப்பு முகாமில் வைத்து சித்திரைவதைற்கு உட்பட்டதனால் மரணம் அடைந்தார்.

மற்றய இரு மாணவிகளின் தந்தையர்கள் யுத்தத்தால் அவையவங்களை இழந்துள்ளார்கள். இச் சூழ்நிலையில் பாடசாலை செல்வதற்கும் இக் கல்வியை தொடர்வதற்கும் சிரமப்பட்டு வந்த வேளையில் இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக ஈருளிகளை வழங்கியுள்ளார் இவர் . போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பல நுற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வியை தொடர மூடியாமல் உள்ளனர் அவர்களுக்கு திரு.திருமதி நித்தியானந்தம் பத்மாவதி தம்பதியினரின் மகள் விதுசா போல் சிந்தித்தால்; பல நூறு மாணவர்கள் கல்வியை தொடர முடியும்.

ஏன் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கூட நிவர்த்தி செய்ய முடியும். இவ் உதவியை வழங்கிய விதுசா அவர்களை உதவும் இதயங்கள் நிறுவனம் பல்கலைகளும் கற்று சீரும் சிறப்புடனும் பல ஆண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.<a href="http://www.tamilarul.net/wp-content/uploads/2016/08/Uthavum...jpg"><img src="http://www.tamilarul.net/wp-content/uploads/2016/08/Uthavum...jpg" alt="Uthavum.." width="300" height="225" class="alignleft size-full wp-image-433" /></a>

<a href="http://www.tamilarul.net/wp-content/uploads/2016/08/Uthavum.-.jpg"><img src="http://www.tamilarul.net/wp-content/uploads/2016/08/Uthavum.-.jpg" alt="Uthavum.-" width="300" height="225" class="alignleft size-full wp-image-434" /></a>

<a href="http://www.tamilarul.net/wp-content/uploads/2016/08/Uthavum.jpg"><img src="http://www.tamilarul.net/wp-content/uploads/2016/08/Uthavum.jpg" alt="Uthavum" width="225" height="300" class="alignleft size-full wp-image-435" /></a>

No comments:

Post a Comment