இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் நல்லாட்சி அரசாங்கம் என பிரகடனம் செய்யப்பட்ட போதிலும், உள்ளக அரசியல் ரீதியாக பல கோணங்களில் முறுகல் நிலைகள் தீவிரமடைந்துள்ளன.
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை தம்வசப்படுத்தும் நோக்கில் மும்முனைகளில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் என தம்மை பிரகடனப்படுத்தியுள்ள பிரிவினைவாத சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு, ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளன.
முத்தரப்பினராலும் நாடாளுமன்றில் தமக்கான ஆதரவினை பெற்று க்கொள்ளும் நோக்கில் பல்வேறுமட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் தினந்தோறும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி பெற்றிருந்தது. அடுத்த படியாக சுதந்திர கட்சி பெற்றிருந்தது.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் போது பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆலோசனைக்கு அமையவும் தேசிய அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டன. இது இரண்டு வருட காலத்திற்கு நீடிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
இவ்வாறான தனிக்கட்சியின் பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் அமையுமாயின் அது யாருக்கு சாதகமான நிலைகைளை தோற்றுவிக்கும் என்பது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலவரங்களின்படி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கே அதிகளவான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இதனை நன்கு அறிந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவர் என்ற ரீதியில் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார். எனினும் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச மீதான விசுவாசம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் பெரும் சங்கட நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினர் என பிளவுபட்டுள்ள சுதந்திர கட்சி உறுப்பினர் மீண்டும் ஒரே கட்சியாக இணைந்து பலமான அணியை உருவாக்க கட்சியின் தலைவர் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
பிளவுபட்டுள்ள கட்சிக் குழுவினர் மத்தியில் முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச பிரதான நபராகவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த இடத்திலும் உள்ளார். இவர்கள் இருவரையும் சுதந்திர கட்சிக்குள் உள்வாங்கி முக்கிய பொறுப்புக்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பசில் மற்றும் கோத்தபாய சுதந்திரக் கட்சியில் இணைய இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன்காரணமாக மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் பாரிய பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய கூட்டு எதிர்க்கட்சியை உடைக்கும் பணியினை பசில் ராஜபக்ச அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகிறார்.
மஹிந்த அணியை சேர்ந்த பலர் ஆளும்தரப்புடன் இணையப் போவதாக பசில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் எதிர்க்கட்சி அணியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் பசிலின் கூற்றை நிராகரித்துள்ளனர்.
எனினும் கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திர கட்சிக்கு இணையாக மற்றுமொரு அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்சிக்கு தலைமைப் பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்ள வேண்டும் என பல உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் மஹிந்த ராஜபக்ச அந்தப் பொறுப்பை முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச வழங்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள பசிலை கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை என தெரிய வருகிறது.
மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என தீவிர ஈடுபட்டில் செயற்பட்டு வரும் மஹிந்த ராஜபக்ச ஏன் கட்சியின் தலைமைப் பதவியை நிராகரித்தார் என்பது தொடர்பில் பலருக்கு குழப்பம் உள்ளன.
ஆனால் சமகால அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக அரசியல் நடவடிக்கையிலிருந்து மஹிந்த ஒதுங்கி இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
அதாவது கடந்த கால ஆட்சியில் மஹிந்த குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய குற்றச்செயல், போர்க்குற்ற நடவடிக்கை, மஹிந்தவின் புதல்வர்களின் கொலைகள் என்பனவற்றிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமாயின், செயற்பாட்டு அரசியல் நடவடிக்கைகளிலிருந்து மஹிந்த ஒதுங்கி இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மஹிந்த அரசியல் நடவடிக்கைகளில் பின்னடிப்பதும், கூட்டு எதிர்கட்சியினரால் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்பதையும் தவிர்த்து வருகிறார்.
ஆனாலும், சமகால மாற்று சக்தி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மஹிந்த ராஜபக்ச திரைமறைவில் மேற்கொண்டு வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனொரு அங்கமாக தனது தனிப்பட்ட வெளிநாட்டு விஜயங்களை, உத்தியோகபூர்வ அரசியல் விஜயங்களாக மஹிந்த மாற்றி வருகிறார்.
கடந்த மாதம் தாய்லாந்து சென்றிருந்த மஹிந்த, தற்போது ஜப்பான் விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு நாட்டின் ஜனாதிபதிக்கு இணையான மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment