May 29, 2016

தப்பிச்செல்ல முயன்ற புலிகளின் முக்கிய தளபதி கைதான மர்மம்….?? வெளியாகும் புதிய திடுக்கிடும் தகவல்கள்…!

இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதியை பயங்கரவாத தடுப்பு போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர்.


விடுதலைப்புலிகளின் தளபதி

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்ற போது மன்னார் மற்றும் வன்னி பகுதிகளில் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் ஆவார்.

இவர் போர் முடிவடைந்த பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்திடம் சரண் அடைந்தார். சுமார் 1லு மாதகாலம் புனர்வாழ்வு முகாமில் இருந்த அவரை பின்னர் ராணுவ புலனாய்வுப்பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.

இந்தியாவுக்கு தப்ப முயன்றபோது சிக்கினார்

அவர் மீதான பல்வேறு புகார்களுக்கு இடையே யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதவன்மாஸ்டரின் வீட்டை பயங்கரவாத தடுப்பு போலீசார் சோதனை போட்டனர். அப்போது அவர் வீட்டில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சாவகச்சேரி-மறவன்புலவு பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் தற்கொலை உடை மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரை போலீசார் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளை வழிநடத்தினார்

பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ‘முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த புலனாய்வாளர்கள் 15 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு அணியாக ஆதவன் மாஸ்டர் வழிநடத்தியது என்பதும் தெரியவந்தது என இந்திய ஊடகமான தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment