May 31, 2016

பலாலி காணி பாதுகாப்பாக இருக்கும் அளவினை விட விஸ்தரிப்பு செய்யப்படமாட்டாது - மாவை, விஜயகலா!

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென பொதுமக்களின் ஒரு துண்டு காணி கூட சுவீகரிக்கப்பட மாட்டாது என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு
கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் தமிழ் இணைத்தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். பலாலி விமான நிலையம் தற்போது இருக்கும் அளவினை விட விஸ்தரிப்பு செய்யப்படமாட்டாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலக த்தில் நேற்றைய தினம் காலை நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது, பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களான மாவை சேனாதிராஜா, திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரே மேற்படி உறுதியை வழங்கியுள்ளனர்.
மேற்படி கூட்டத்தில் பலாலி பிரதேசத்தின் மீள்குடியேற்ற விடயம் பற்றி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது பொதுமக்கள் தமது காணிகள் விடுவிக்கப்பாடல் வேண்டும் எனவும். பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கென தமது காணிகள் சுவீகரிக்க்ப்படக்கூடாது என கோரிக்கைகள் முன்வைத்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா, இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர் அதிகாரிகளுடன் கலந்து உரையாடியுள்ளோம். அவர்கள் காணிகளை சுவீகரித்து விமான நிலைய அபிவிருத்தியினை மேற்கொள்வதில்லை தீர்மானித்துள்ளனர்.
எங்களுடைய சம்மதம் இல்லாமல் பலாலி விமான நிலையத்திற்கென ஒரு துண்டு காணியும் சுவீகரிக்கப்பட மாட்டாது என உறுதியளித்த அவர், பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்பு செய்யப்பட மாட்டாது எனவும், பிரதேச விமான நிலையமாகவே அபிவிருத்தி செய்யப்படும் எனவும், அது தற்போது அமைந்துள்ள விமான நிலைய காணிகளுக்கு உள்ளேயே மேற்கொள்ளப்படும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பின்னர் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் திருமதி விஜயகாலா மகேஸ்வரன், பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கப்படும் என அரசாங்கம் உறுதியாக அறிவிக்கவில்லை.
அந்த காணிகள் மக்களுடையது தான் அவை எப்போது விடுவிக்கப்பட தான் வேண்டும். மக்களுடைய மீள் குடியேற்றத்திற்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என அவர் உறுதியளித்திருந்தார்.

No comments:

Post a Comment