May 29, 2016

நாங்கள் சுயாட்சிக்கு எதிரானவர்கள் அல்லர்! - மஹிந்தவும் ஆதரவு தெரிவிப்பாராம்! வாசுதேவ!

ஒற்றையாட்சி அரசமைப்பின் கீழ் மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்குவதை நாங்கள்ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நிச்சயமாக அதற்கு ஆதரவுத் தெரிவிப்பார் என ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்றஉறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சுயாட்சிக்கு வாசுதேவ நாணயக்கார ஆதரவுத் தெரிவித்திருப்பது தொடர்பில் அவரிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இவ்விடையம் குறித்து கருத்துரைத்த அவர்,

"கடந்த 2013ஆம் ஆண்டு அனைவரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தியிருந்தார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றும் என்றுதெரிந்துக்கொண்டுதான் அவர் தேர்தலை நடத்தினார்.

மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கு எதிரானவன் நானல்லன். முன்னாள்ஜனாதிபதியும் எதிரானவர் அல்லர். நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும்சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

ஒற்றையாட்சி அரசமைப்பில்மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்க முடியும். அவ்வாறு கொண்டுவரப்படும்அரசமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆதரவுதெரிவிப்பார்.

மாகாணங்களுக்கு பொலிஸ், காணி, நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டு அதனை மீளப் பெறமுடியாதவாறு அரசமைப்பு உருவாக்கப்படுமாயின் சமஷ்டி தொடர்பான கோஷங்கள்மறைந்துவிடும்'' -என்றார்.

No comments:

Post a Comment