September 4, 2015

கையேழுத்துப் போராட்டத்தினை கைவிடுமாறு அழுத்தம்!

யுத்த்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று மாலையடன் ஆரம்பிக்கவுள்ள கையேழுத்துப் போராட்டத்தினை கைவிடுமாறு போராட்டக்
குழவினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டக் குழுவினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டு             விலகுமமாறும் சில தரப்பினர்களால் போராட்டக் குழுவின் முக்கியஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப் போராட்டமானது இன்று மாலை 4 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்; ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதனை கைவிடுமாறே அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இப் போராட்டமானது தொடர்ந்து நடைபெற்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கையனை பாதிக்கும் என்றும் போராட்டத்தினை கைவிடுமாறு தொலைபேசியூடாக அழுத்தங்கள்கொடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment