September 28, 2015

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2015 டீஸ்பூர்க் (படங்கள் இணைப்பு)

26.09.2015 சனிக்கிழமை டீயூஸ்பூர்க் நகரில்  மத்தியமாநிலம் இரண்டில் அமைந்துள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பாக  தழிழர் விளையாட்டுக்
கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்டது.
யேர்மனியத் தேசியக்கொடி மற்றும் தமிழீழத் தேசியக்கொடி அத்தோடு தழிழ்க்கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பமானது. இதில் காலநிலையையும் பொருட்படுத்தாமல் அம்மாநிலத்தில் அமைந்திருந்த தமிழாலய மாணவர்கள் மிகவம் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
வெற்றிபெற்ற வீரர்களுக்கும் வீராங்கணைகளுக்கும் பதக்கங்கள் அணிவித்து மதிப்பளிக்கப்;பட்டதுடன் முதன்மை வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைத் தட்டிக் கொண்ட தமிழாலயங்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் கொடுத்து மதிப்பளிக்கப்பட்டது.
374 புள்ளிகளைப் பெற்று  முதலாமிடத்தை எசன் தமிழாலயமும்.
259 புள்ளிகளைப் பெற்று  இரண்டாமிடத்தை வூப்பெற்றால் தமிழாலயமும்.
214 புள்ளிகளைப் பெற்று  மூன்றாமிடத்தை போகும் தமிழாலயமும். வெற்றிகளைத் தனதாக்கிக் கொண்டன.


























































































































































No comments:

Post a Comment