May 29, 2015

யாழில் போதைப்பொருள் கலாசாரத்தை மகிந்த அரசாங்கமே திட்டமிட்டு முன்னெடுத்தது! மனோ!

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கலாசாரத்தை கடந்த அரசாங்கமே திட்டமிட்டு முன்னெடுத்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார்.


யாழ்ப்பாணத்தில் வித்தியா படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், வித்தியாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்குமான நிகழ்வொன்று நேற்று  மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வடக்கில் இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை புலிகள் வந்துவிட்டதாக சித்தரிப்பவர்கள் மனவியாதிக்காரர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment