சிசுவை கைவிட்டதாக கூறப்படும் தாய் கைதாகியுள்ளார்.
ஆலையடிவேம்பு கோளாவில் பிரதேச வடிகான் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு பெண் ஒருவரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து பொலிஸார் கோளாவில் பிரதேசத்தில் வைத்து குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர். திருமணமாகாத இந்தப் பெண், எற்கனவே இரண்டு குழந்தைகளை பிரசவித்து இப்படி கைவிட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆலையடிவேம்பு கோளாவில் பிரதேசத்தில் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 12.30 மணியளவில் வடிகான் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சிசுவொன்றை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்டெடுத்தார். பொலிஸாருக்கும் தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த சிசுவை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறுவர் பராமரிப்புப் பிரிவில் அனுமதித்துள்ளனர். பொலிசாரின் விசாரணையில், அந்தப்பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டு கைதாகியுள்ளார். இவர், ஏற்கனவே இரு பிள்ளைகளை இவ்வாறு பிரசவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, கைவிடப்பட்ட இந்த சிசுவை தத்தெடுத்து வளர்க்க இரண்டு பெண்கள் முன்வந் துள்ளதாக தெரிகிறது.

No comments:
Post a Comment