February 15, 2015

வாழைச்சேனை காகித ஆலையால் ஊழியர்கள் திண்டாட்டம்!

வாழைச்சேனை காகித ஆலையின் மின்சாரம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட காகித ஆலை ஊழியர்கள் தொழில் வாய்ப்பிழக்கின்ற அவல நிலமை ஏற்பட்டுள்ளதாக
அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 09.02.2015ஆம் திகதியன்று மட்டக்களப்பு தலைமை மின்சார சபை கிளை உத்தியோகஸ்த்தர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சபைக்கு 33 கோடி ரூபாய் மின்சார கட்டணம் கடந்த பல வருடங்களாக செலுத்த தவறியதினால் இந்த நடிவடிக்கை ஆலை முகாமைத்துவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் காகித ஆலை ஊழியர் சங்க உறுப்பினர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுளன.
ஆலையின் இயந்திரமும் முற்றாக இயங்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. இந்நிலமை தெடர்ந்து நீடிக்கப்படுமானால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு ஆலை மூடப்படக்கூடிய நிலைமை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர். குறித்த ஆலையில் இருந்தே பாசிக்குடா சுற்றுலா விடுதிகளுக்கு குடி நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா விடுதிகளிலும் நீர் இன்மையில் பல அசௌகரியங்களை உல்லாச பயனிகள் எதிர்கொன்டுள்ளனர். அத்துடன் ஆலைக்கு இதன் மூலம் கிடைத்த வருமானமூம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆலை விடுதிகளில் தங்கியிருக்கும் பல குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 14,15ஆம் திகதிகளில் அத்தியாவசிய ஊழியர்களை தவிர்ந்த ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஆலை முகாமையினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை காகித ஆலையின் நிறைவேற்று பொதுமுகாமையாளர் எம்.முபாரக் கருத்துதெரிவிக்கையில் கடந்த அரசாங்கத்தின் கீழ் ஆலைக்கு பொறுப்பாகவிருந்த முகாமையாளர் மின் கட்டணம் உள்ளிட்ட தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் செலுத்தவில்லை என அவர் கூறினார்.
மேலும் அந்த முகாமையாளருக்கு எதிராக பொலிஸ் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலையின் தற்போதைய நிலைமையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறைவேற்று பொது நல உத்தியோகஸ்தர் தெரிவித்தார். மின்சாரசபைக்கு செலுத்தப்பட்ட கட்டணம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சுக்கு ஊடாக திரைசேரிக்கு அறிவித்துள்ளதாகவும் திரைசேரியினால் நிதி ஒதுக்கப்பட்டவுடன் அடுத்த வாரமளவில் ஆலை மீள ஆரம்பிக்கப்படுமெனவும் ஆலையின் நிறைவேற்று பொது நல உத்தியோகஸ்தர் எம்.முபாரக் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment