September 7, 2014

விடுதலையை நோக்கிய ஈருருளிப்பயணம் - நாள் 3!!

காலத்தையும், விடுதலை நோக்கி நடக்கும் பயணங்களையும்  தடுத்திட எவராலும் முடிவதில்லை. உத்வேகம் கொடுக்கும் மனவெழுச்சியோடு, உன்னதத்தின் திசை நோக்கி நீங்கள் செய்யும் பயணத்தில்  , உலகத் தமிழர் இதயங்கள் உவகை கொள்ளுகின்றன.

தன்னிலை அறிந்தவன் மட்டுமே சுதந்திர வேட்கை கொள்கிறான். சுதந்திர வேட்கையின் எழுச்சியே  அவனைப் போராடத் தூண்டுகிறது. தன்னிலை மறந்த தவம் கொண்டு, சுதந்திர வேட்கைக்காய்ப் போராடத் துணிந்த உங்கள் உறுதி எம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது.
 காலச் சுழற்சியை மீறிய உங்கள் பாதங்களில் விரைவுதனில், எங்களின் தேசத்தின் உருவகம் அடையாளப்படுத்தப் படுகிறது என்பதில் ஐயம் திரிபுறுகிறது.
மண்ணின் விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த வீரமறவர்களின் உயிர்மூச்சு, உங்கள் பாதங்களின் வலி நீக்கும். காற்றாய் எங்கும் கலந்திருக்கும் கல்லறை உயிரிகளின் வாழ்த்து , உங்களின் வீரப் பயணத்தில் துணையிருக்கும். என்றும் நெருப்பாய் நிற்கும் தலைவனின் சிந்தனைகள், உங்கள் மேனியை வாட்டும் குளிரை விரட்டும். உங்கள் பின்னே புலம் திரளும், செருக்களம் சிதறும். விழ விழ எழுந்தோம் என்பதை உங்கள் வீரப்பயணம் உலகிற்கு உணர்த்தும். ஒன்று பலவாகி நிற்கும் அபூர்வம் தமிழினத்திற்கு மட்டுமே உரியதென்பதை உலகம் பார்க்கட்டும். எமை எதிர்க்கும் அற்பர் எல்லாம் , உங்கள் ஈருருளிப்பயணத்தின் பலத்தில் வீழட்டும்.




தமிழீழ உறவுகளின் துயர்துடைக்கவென ஐ.நா அலுவலகம் நோக்கி ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் எமது சகோதர்களுக்கு, ஐரோப்பிய வாழ்தமிழுறவுகள் யாவரும் உறுதுணையாக இணைந்து, அவர்களது ஈருருளிப்பயணத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும்.
மூன்றாவது நாளாகிய இன்று ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்கள் 75 km தூரத்தை கடந்து லக்ஸ்சம்புர்க் நாட்டை சென்றடைந்துள்ளனர் . நாளை மறுதினம் யேர்மன் நாட்டை சென்றடைய உள்ளனர் . யேர்மனியில் சார்புருக்கன் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நகர மத்தியில் தமிழ் மக்கள் ஈருருளிப்பயணவீரர்களை வரவேற்க உள்ளனர் .

சந்திப்பு நடைபெறும் இடம் : Galeria Kaufhof



அத்துடன்; இயற்கையின் சீற்றங்களையும் பொருட்படுத்தாது, தமிழீழ உறவுகளுக்கு ஓர் நிரந்தரமான விடிவை ஏற்படுத்தித்தர வேண்டுமென்ற அவாவுடன், ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் சகோதர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எதிர்வரும் செப்டெம்பர், பதினைந்தாம்   நாள், ஜெனீவா முருகதாசன் திடலில் தமது கோரிக்கைளோடு அவர்கள் ஐ.நா வின் கதவைத்தட்டும் அவ்வேளையில்; ஐரோப்பிய வாழ் தமிழுறவுகள் யாவரும், அவர்களின் கரங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பேரெழுச்சியுடன் திரண்டு வந்து இணைந்துகொள்ளவேண்டும்.

இவர்களை தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுக்கு பின்வரும் இலக்கங்களை தொடர்புகொள்ளவும் :0032 488328941

--
Fur further Information / மேலதிக தொடர்புகளிற்கு

No comments:

Post a Comment