September 7, 2014

தியாகி திலீபனின் நினைவோடு 26.09 உலகளாவிய ரீதியில் உண்ணாநோன்பு!!

தியாக தீபம் திலீபனின் 27ஆவது நினைவு தினம் தமிழ் நாட்டிலும் , புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களால் இன்று பெரும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது .
பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது 12 நாள்கள் உண்ணா நோன் பிருந்து தனது உயிரைத் தியாகம் செய்தார். தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த திலீபனின் நினைவோடு உலகளாவிய ரீதியில் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் நடைபெற உள்ளது .

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 12 நாள்கள் உண்ணா நோன்பிருந்த திலீபனின் கோரிக்கைகளைப் பாரததேசம் கணக்கில் எடுக்கவில்லை. இதனால் செப்ரெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை நல்லூரில் முற்பகல் 10.48 மணிக்கு திலீபன் சாவைத் தழுவிக் கொண்டார். திலீபன் சாவைத் தழுவிய 27 வருடங்கள் நிறைவடையும் அன்றைய  நாளைத் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கின்ற வேளையில் அன்றைய தினத்தில் ஒவ்வொரு தமிழனும் தமிழீத்துக்காக அடையாள உண்ணாநோன்பிருந்து , எமக்கான போராட்டத்தை வலுப்பெற வைக்கவேண்டும் .



புலம்பெயர் நாடுகளில்  நிகழ்வுகள் நடைபெறும் முகவரி மிக விரைவில் அறிவிக்கப்படும் .

சம நேரத்தில் எமது தமிழக உறவுகள்  26.09.2014 அன்று மாபெரும் போராட்டத்தை  நடாத்த தீர்மானித்துள்ளனர் . அன்றைய தினத்தில் தமிழகம் எங்கும் தியாகி திலீபன் அவர்களின் நாமத்தோடு மாணவர்கள் , தமிழின உணர்வாளர்கள், அரசியல் பிரமுவர்கள் அனைவரும் இணைந்து அடையாள உண்ணாநோன்பு போராட்டத்துடன் மாபெரும் பேரணியை நடாத்த உள்ளனர் . குறிப்பாக நேற்று நடைபெற்ற தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் திரு வேல்முருகன் அவர்களின் தலமையில் பல கட்சிகள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் இணைந்து 26.09 அன்று ஒரு லட்சம் மக்களை ஒன்றிணைந்து போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

அத்தோடு தியாகி திலீபன் அவர்கள் தனது உண்ணாநோன்பு போராட்டத்தை ஆரம்பித்த நாளில்  (15.09 .)  இருந்து உயிர் நீத்த 26.09 . திகதி வரை தமிழகத்தில்  தமிழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து பல்வேறு உயர்கல்லூரியில் தமிழீழத்துக்கான மாதிரி பொதுவாக்கெடுப்பு நடாத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


"மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!"



--
Fur further Information / மேலதிக தொடர்புகளிற்கு
 
 

No comments:

Post a Comment