August 20, 2016

தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் துஆழு தாம் கைது செய்வதனை தடுக்குமாறு கோரி மனு!

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி தாம் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு நீதிமன்றின் உதவியை நாடியுள்ளார்.


கொழும்பு மாவட்ட முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஆனந்த சமரசேகரவே இவ்வாறு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் இந்த அதிகாரி உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாஜூடீனின் மரணம் விபத்தினால் நேர்ந்தது என முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை வழங்கியுள்ளார்.

எனினும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பெர்றுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் நடத்திய விசாரணைகளின் போது விபத்து அல்ல அது படுகொலையாக இருக்கக் கூடும் என்ற ஊடகம் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment