விடுதலைப்புலிகளின் குண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மூளை பாதிப்படைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனால், இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் நான்கில் மூன்று பகுதியை தனது ஆட்சியிலேயே முடிவுக்கு கொண்டு வந்ததாக சந்திரிக்கா கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலேயே இராணுவத்தினர் புலிகளிடத்தில் மூன்று முறை தோல்வியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
யுத்த வெற்றிக்கு தனது ஆட்சி காலத்தில் நான்கில் மூன்று வீதம் பங்களிப்பு கிடைத்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஒரு வீத பங்களிப்பு கிடைத்ததாக சந்திரிக்கா கூறியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியும், யுத்த வெற்றிக்கு தனது பங்களிப்பினை ஓரளவு செய்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சந்திரிக்கா கூறுவது போன்று, ஐக்கிய தேசிய கட்சி யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த விதம் கேள்ளிக்குறியாகவே இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிகாலத்திலேயே இராணுவத்தினர் மூன்று முறை புலிகளிடம் படுதோல்விகளை சந்தித்துள்ளனர்.
முல்லைத்தீவு இராணுவப் படைத்தளம் முற்றாக அழிக்கப்பட்டமை, வன்னியிலிருந்த ஒட்டுமொத்த இராணுவப்படைத்தளங்களும் முற்றாக அழிக்கப்பட்டமை மற்றும் ஆணையிரவு படைத்தளம் அழிக்கப்பட்மை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி காலத்திலேயே இடம்பெற்றது.
இதேவேளை, புலிகளின் குண்டுதாக்குதலுக்கு இலக்காகி சந்திரிகா குமாரதுங்கவின் மூளை பாதிக்கப்பட்மையினாலேயே அவர் இவ்வாறு கூறுவதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment