August 17, 2016

நீதிக்கு புறம்பான அதிபர் நியமனத்தினை ரத்துசெய்யுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம்!

 மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு நீதிக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அதிபர் நியமனத்தினை இரத்துச்செய்து நிரந்தர அதிபரை நியமனம் செய்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்.உதயரூபனினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட-கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் வகிமா/கஅ/2004/அ/1ஆம் இலக்க 2004-09-07 சுற்றுநிருபத்தின் 4ஆம், 5ஆம் பந்திகளில் குறிப்பிடத்தன்பிரகாரம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியானது ஒரு 01ஏபி பாடசாலையாகும்.

கல்வி,உயர்கல்வி அமைச்சின் 1998/23 இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக பகுதி 02(அ),03,06 இற்கு அமைவாக மேற்படி அதிபர் நியமனத்தினை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.

1589/30 ஆம் இலக்கமிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 66,67 மற்றும் 68இற்கு அமைவாகவும் 1585/31 ஆம் இலக்கமிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 11(03)இற்கு அமைவாகவும்,

சட்ட ஆட்சியை மேலான கருத்தில்கொண்டு நீதிக்கு புறம்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள தற்காலிக அதிபரின் நியமனத்தினை ரத்துச்செய்து மேற்படி கல்லூரிக்கு நிரந்தர அதிபரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் என அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment